பெண்கள் 40 வயது அடையும்போது... இதை எல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள் - டாக்டர் ஜெயரூபா
பெண்களுக்கு 40 வயது ஆகப்போகிறது என்றாலே அவர்கள் தங்கள் உடலில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
பெண்களுக்கு 40 வயது ஆகப்போகிறது என்றாலே அவர்கள் தங்கள் உடலில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று டாக்டர் ஜெயரூபா கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
மெனோபாஸ் என்பது திடீரென வரும் விஷயம் இல்லை. 40வயதிலிருந்து நம் உடல் அதற்கான தயார் பணிகளில் இறங்குகிறது. இதற்குப் பெயர் பிரி மெனோபாஸ். இந்தக் காலகட்டத்தில் நாம் சந்திக்கும் சில சவால்களும் அதற்கான தீர்வு தரும் தேநீர் வகைகளும் பற்றி டாக்டர் ஜெயரூபா ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
1. ஹாட் பிளஷ் - உடல் காரணமில்லாமல் அதிகம் வியர்த்தல் பிரச்சனை உள்ளவர்கள் உடலை குளிர்விக்க நன்னாரி நீர், புதினா தேநீர் குடிக்க வேண்டியது அவசியம். இவை உடலுக்கு குளிர்ச்சி தரும்.
2. தூக்கமின்மை சிக்கலா? இரவு 7 மணிக்கு மேல் ஒரு டம்ளர் பால் அதில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய், ஒரு சிட்டிகை ஏலக்காய் இதனைக் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் உண்டு. இதோடு கசகசா பால் அருந்தலாம். இத்துடன் மெல்லிய இசை கேட்கவும், யோக நித்ரா செய்யவும்.
3. மூட் ஸ்விங் – கோபம், அழுகை, மறதி? போன்ற பிரச்சனைக்கு துளசி தேநீர், எலுமிச்சை தோல் தேநீர் குடிக்கலாம். இவை மூளைக்கு சீரான சமிக்ஞை தரும், நெகட்டிவ் எண்ணங்களை சமநிலைப் படுத்தும்.
Advertisment
Advertisements
4. பிறப்புறுப்பு வறட்சி - இது ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக ஏற்படும். பிறப்புறுப்பு பகுதியில் வறட்சி ஏற்படும். இதற்கு சதாவரி தேநீர், அதிமதுரம் தேநீர் குடிக்கலாம்.
5. உணவில் எள் ஆளி விதை, போன்றவை ஹார்மோன் சமநிலைக்காக அவசியம்.
6. உடல் எடை அதிகரிப்பது, உப்புசம், வயிறு வீக்கம்? போன்ற பிரச்சனைக்கு சோம்பு சேர்த்த தேனீர், பால் கலக்காத இஞ்சி தேநீர் குடிக்கலாம். இவை உப்புசத்தைக் குறைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.