40 வயதிற்கு பிறகு நம் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம். 40 வயதிற்கு பிறகும் கூட பெரும்பாலனோர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர்.
அப்படி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் உணவாக கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய 3 முக்கிய உணவாக மருத்துவர் சிவராமன் கூறுவது பற்றி பார்ப்போம்.
முதலில் வெந்தயம்: மிக அதிகமான நார்ச்சத்து கீரையை விட வெந்தயத்தில் அதிகம் உள்ளது.
கரையாத நார்களை கரைத்து மலத்தை வெளியேற்ற உதவும். நார்சத்து அதிகம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும்.
மேலும் இதில் வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் போன்றவையும் உள்ளன. இதனால் இருதய பிரச்சனை, மூட்டு வலி மற்றும் உடல் பருமன் போன்றவற்றையும் குணப்படுத்த உதவும்.
இதனை தினமும் ஊறவைத்து சாப்பிடலாம். அல்லது அப்படியே மென்று முழுங்கலாம். நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் டயட்டில் ஏதாவது ஒரு முறையில் வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
சின்ன வெங்காயம்: சின்ன வெங்காயத்தை பச்சையாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது. தயிருடன் சேர்த்து தயிர்பச்சடி மாதிரி சாப்பிடலாம். தினமும் இதனை சாப்பிடலாம். சின்ன வெங்காயத்தில் பாலிஃபினால்ஸ் அதிகம் உள்ளது. அதில் அதிக பயோடிக்தன்மை உண்டு.
அதனால் மூல நோய், நரம்புத்தளர்ச்சி, புற்றுநோய்க்கு எதிர்ப்பு பண்புகள் வராமல் தடுக்கும். மூட்டு வலிக்கும் சிறந்த வைத்தியமாக இருக்கும்.
வெள்ளைப்பூண்டு: வெள்ளைப்பூண்டை வெந்நீரில் மசித்து அப்படியே சாப்பிடலாம் . அல்லது உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். பச்சையாக உட்கொள்ள கூடாது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“