ஒருவேளை மட்டும் தான் ரைஸ் சாப்பிடுறேன்... எஸ்.கே டயட் பிளான் இதுதானாம்!
நடிகர் சிவகார்த்திகேயன் தான் பின்பற்றும் உணவு முறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, அவரது டயட் பிளான் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
நடிகர் சிவகார்த்திகேயன் தான் பின்பற்றும் உணவு முறை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, அவரது டயட் பிளான் குறித்து இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை படைத்து வெற்றிகரமான கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொடங்கிய அவரது பயணம், இப்போது வெள்ளித் திரையில் பிரகாசமாக இருக்கிறது.
Advertisment
இதேபோல், தமிழ் சினிமாவில் ஃபிட்டாக இருக்கும் நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டால் சிவகார்த்திகேயனின் பெயரும் இடம்பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தற்போது அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில், ஒரு ராணுவ வீரரின் உடல்மொழியை அப்படியே பிரதிபலித்தார்.
இவை அனைத்தையும் ஒரே நாள் இரவில் சிவகார்த்திகேயன் சாதித்து விடவில்லை. பல நாட்களாக உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றி, சீரான உடற்பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே இது போன்ற ஃபிட்னெஸ் சாத்தியப்படும்.
உடலை ஆரோக்கியமாக பராமரிப்பதில் 30 சதவீதம் உடற்பயிற்சி பயன்படுகிறது என்றால், உணவு முறை தான் மீதமுள்ள 70 சதவீதத்தை தீர்மானிக்கிறது. அந்த வகையில் நம் உடலுக்கு ஏற்ற சத்தான உணவுகளை சாப்பிடுவது அவசியமாகிறது. அதன்படி, நடிகர் சிவகார்த்திகேயன் தான் பின்பற்றும் உணவு முறை குறித்து தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு பொருட்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தானும் அப்படி ஒரு உணவு முறையை தற்போது பின்பற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாதம் சாப்பிடுவதாக சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மற்ற நேரங்களில் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களையே தான் சாப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர்ச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து போன்றவை நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும்.
நன்றி - Darus Kitchen Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.