மிகவும் பிரபலமான வில்லியாக ஏராளமான சீரியல்களில் பார்த்து ரசித்த ஒரு நடிகை தான் கிருத்திகா. இவர் குழந்தை பிறந்த பிறகு உடல் பருமனால் மிகவும் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல்களுக்கு உண்டானார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டி ஒலி' சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கிருத்திகா. நடனம் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு இருந்து அவருடைய சினிமா பயணம் ஆரம்பித்தது என்று கூறலாம்.
திருமணமான கிரித்திகாவுக்கு குழந்தை பிறந்த பிறகு அவருடைய எடை கிட்டத்தட்ட 83 கிலோ வரை அதிகரித்தது. அதனால் பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான கிருத்திகா மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். அதுவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பரவி வந்தது.
அதனால் மூன்று ஆண்டுகள் நடிக்காமல் சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் இருந்து வந்தார்.
பலரும் கிருத்திகாவின் உடல் பருமன் குறித்து கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவருக்கு உடல் எடை ஒரு நெருடலாக இருந்துள்ளது. இதனால் மிகவும் கடினமாக ஃபிட்னெஸ் பயிற்சிகளை மேற்கொண்டு 83 கிலோ இருந்த எடையை இரண்டே ஆண்டுகளில் 60 கிலோவாக குறைத்ததாக அவர் கூறியிருக்கிறார்.
அப்படியாக அவர் உடல் எடை குறைப்புக்கு உதவிய ஒரு ஜூஸ் குறித்து அவர் கூறி இருக்கிறார். அந்த ஜூஸ் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இடித்த நெல்லி
நறுக்கிய எலுமிச்சை
இஞ்சி
புதினா
உப்பு
செய்முறை
மேற்குறிப்பிட்ட இவை அனைத்தையும் ஒரு வாட்டர் பாட்டிலில் போட்டு அதில் சுடு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்து கொண்டு அவ்வப்போது தாகம் எடுக்கும்போது எல்லாம் குடிக்கலாம். உடல் எடை இழப்புக்கு உதவும்.
இதை தான் நடிகை கிருத்திகா சூட்டிங் செல்லும் போதெல்லாம் அவர்கள் அம்ம கொடுத்து விடுவதாக கூறினார்.
Quick & Healthy Drink| Weight Loss Tips | Krithika Annamalai #shorts
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.