எலும்பை வலுவாக்கும் இந்த அடை... செம்ம ஈஸி டிப்ஸ்; இப்படி ஒருமுறை செய்து பாருங்க!

கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்பு பலவீனமாக இருக்கும். அப்படிப்பட்ட எலும்பை உறுதியாக்க உதவும் ஒரு உணவை எப்படி செய்வது என்று பார்ப்பொம்.

கால்சியம் சத்து குறைபாட்டால் எலும்பு பலவீனமாக இருக்கும். அப்படிப்பட்ட எலும்பை உறுதியாக்க உதவும் ஒரு உணவை எப்படி செய்வது என்று பார்ப்பொம்.

author-image
WebDesk
New Update
அடை தோசை

பெண்களுக்கு வரும் இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் கருப்பு உளுந்து அடை எப்படி செய்வது என்று பார்ப்போம். மோனி ஸ்பைசி கிச்சன் யூடியூப் சேனலில் வழங்கப்பட்ட கருப்பு உளுந்து அடை எப்படி செய்வது என்று பார்ப்போம். இது சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.  

Advertisment

கருப்பு உளுந்தில் அதிக சத்துக்கள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். மேலும் இது உடலுக்கு மிகவும் நல்லது.

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து 
பச்சரிசி 
பச்சை மிளகாய்  
கருவேப்பிலை  
பெரிய வெங்காயம்  
சீரகம்  
பெருங்காயத்தூள்  
உப்பு  
தேங்காய் எண்ணெய்  

Advertisment
Advertisements

செய்முறை:

கருப்பு உளுந்து மற்றும் பச்சரிசியை 2-3 முறை நன்றாக கழுவவும். பிறகு போதுமான தண்ணீர் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். சூடான நீரில் ஊற வைத்தால் 2 மணி நேரத்தில் ஊறிவிடும்.

ஊறிய உளுந்தை தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். தேவைப்பட்டால் 1-2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து, கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்க்கவும். 

சீரகம், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும். ஒரு பாலித்தீன் கவரில் அல்லது வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவவும். ஒரு பெரிய உருண்டை அளவு மாவை எடுத்து, கைகளால் தட்டவும்.

தோசை தவாவை சூடாக்கி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். தட்டி வைத்த அடையை தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகும் வரை சுடவும். அவ்வளவு தான் சூடான மற்றும் ஆரோக்கியமான கருப்பு உளுந்து அடை ரெடியாகிவிடும். 

சம்பார் அல்லது உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த ரெசிபி எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காலை உணவு. வழக்கமான இட்லி தோசைக்கு பதிலாக இதை செய்து பாருங்கள். 

bone health Reasons to eat urad dal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: