வீட்டிலேயே இனிப்பு வகைகளை நிறைய செய்து இருக்கிறோம். ஆனால் புதுவிதமான சத்தான சாக்லேட் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம்.
குழந்தைகளுக்கு சாக்லேட் கடையில் வாங்கி கொடுக்காமல் சத்தான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். இதை செய்வதற்கு பாதாம் அவசியம். பாதாமில் அதிக புரதச்சத்து உள்ளது. பாதாம் சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட இந்த பாதாம் மிட்டாயை விரும்பி சாப்பிடுவார்கள்.இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாதாம்
சர்க்கரை
எள்
பட்டர்
இவை அனைத்தையும் தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.
செய்முறை
கடாயில் தேவையான அளவு பாதாம் எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும் பின்னர் பாதாம் சர்க்கரை இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும். சர்க்கரை கரைந்து பாதாமுடன் ஒட்டி பாகு மாதிரியான பதத்தில் கிடைக்கும்.
பாதாம் எள்ளு மிட்டாய்...
அப்போது அதில் ஒரு டீஸ்பூன் பட்டர் சேர்த்து கிளறினால் சர்க்கரை, பாதாம், பட்டர் மூன்றும் சேர்த்து கரைந்து பிசுபிசுப்பான பதத்தில் இருக்கும். பின்னர் அதை வெள்ளை எள்ளுடன் சேர்த்து கலந்து காயவிட்டு எடுத்தால் பாதாம் பருப்பு எள்ளு மிட்டாய் ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“