கற்றாழையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. இந்நிலையில் கற்றாழை சாறை குடிப்பதால், உடலுக்கு கிடைக்கும் அதிக நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கி கூறியிருப்பதாவது,
கற்றாழையில் கால்சியம், மெக்னீஷியம், பொட்டாஷியம் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, சி, இ மற்றும் பி காம்பிளக்ஸ் உள்ளது. இந்த சத்துகள் கண் பார்வை திறனை அதிகரிக்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் பார்த்துகொள்ளும். வரண்ட கண்களை ஏற்படாமல் தடுக்கும்.
கற்றாழை குறைந்த கலோரிகளை கொண்ட ஜூஸ் என்பதால் உடல் எடையை குறைக்க உதவும். உடல் இயக்கத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள நச்சு தன்மைகளை நீக்கி, கொழுப்பை குறைக்க உதவும்.
இதில் பாலிபினால்ஸ் அதிகமாக உள்ளது. இவை ஆண்டி ஆக்ஸிடண்டாக செயல்படுகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளது இது நமது செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. தொடர்ந்து நாம் கற்றாழை ஜூஸை குடித்து வந்தால், நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தீவிரமான நோய் ஏற்படாது. கூடுதலாக வீக்கம் ஏற்படாது.
கற்றாழை ஜூஸ் யார் குடிக்க கூடாது? | aloe vera juice health benefits?
சர்க்கரை நோயாளிகள் இதை குடித்தால் சுகர் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் இதில் உள்ள பொருட்கள், இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கும். ஆனால் சுகர் பேஷண்ட்ஸ் இதை சரியான அளவில் எடுத்துகொள்ள வேண்டும்.
கற்றாழை ஜூஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சோற்றுகற்றாழை
இஞ்சி சாறு
எலுமிச்சை சாறு
ஊறவைத்த சியா விதைகள்
இந்து உப்பு
சீரகத்தூள்
சாட் மசாலா
செய்முறை
ஒரு நீண்ட சோற்றுகற்றாழை எடுத்து நன்கு கழுவி மேல் உள்ள பச்சைையை எடுத்து விடவும்.
அதேபோல இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, பின்னர் ஊறவைத்த சியா விதைகள் ஆகியவற்றையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கற்றாழை உள்ளே உள்ள வெள்ளை பகுதியை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். இவற்றை நன்கு கழுவி விட வேண்டும். பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து தண்ணீர் மாதிரி வந்ததும் அதில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, ஊற வைத்த சியா விதைகள், சிறிது இந்து உப்பு, சீரகத்தூள், சாட் மசாலா சிறிது சேர்த்து குடிக்கலாம்.
தேவைப்பட்டால் நாட்டு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸ் தயார் செய்த அரைமணி நேரத்தில் குடிக்க வேண்டும்.