உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த நெல்லிக்கனிக்கு நிகர் வேறெந்த ஒரு பொருளும் இல்லை. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட இந்த நெல்லிக்கனியை சாப்பிடுவதற்கு பழ வழிமுறைகள் உள்ளது.
பச்சை கனியாகவும் சாப்பிடலாம் ஜூஸ், ஸ்நாக்ஸ், இனிப்புகள் போன்றும் செய்து சாப்பிடலாம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. முடி உதிர்வு, செரிமானம், நீரிழிவு, தைராய்டு பிரச்சினை, கண்பார்வை தெளிவின்மை போன்ற அன்றாட பிரச்னைகளுக்கும் நெல்லி தீர்வாக அமைகிறது.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய்
இஞ்சி
பனை வெல்லம்
நெய்
எலுமிச்சை
செய்முறை
ஒரு இட்லி பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க அதனை லேசாக அழுத்தினால் வெந்துவிட்டதா என்று தெரியும். பின்னர் உள்ளே உள்ள கொட்டையை நீக்கி விடவும்.
இஞ்சியை தோல்களை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் இஞ்சி துண்டுகளை ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை நன்கு பாகு மாதிரி எடுத்துக் கொள்ளவும். பதம் தேவையில்லை.
இப்போது வெல்ல கரைசலில் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் இஞ்சி விழுதை சேர்த்து நல்ல கெட்டியான பதத்திற்கு நெய் சேர்த்து கிளறவும்.
வருடம் முழுதும் நெல்லிக்காய் சாப்பிட இப்படி செய்து வைக்கலாம்/ Amla,ginger murrappa
நெல்லிக்காய் இஞ்சி முரப்பா பதத்திற்கு வந்து விட்டதா என்று சரிப்பார்க்க கையில் லேசாக எடுத்து உருட்டி பார்க்கவும். நல்ல உருண்டையாக கைகளில் ஒட்டாமல் கிடைத்து விட்டால் நெல்லிக்காய் இஞ்சி முரப்பா ரெடி என்று அர்த்தம்.
அப்படி இல்லையென்றால் மறுபடியும் ஒரு 5 நிமிடம் மிதமான சூட்டில் வைத்து கிளறவும். பின்னர் ஒரு தட்டில் நெய் தடவி நெல்லிக்காய் இஞ்சி முரப்பா சேர்த்து சிறிது நேரம் ஆறவிட்டு தேவையான வடிவில் வெட்டி எடுத்தால் நெல்லிக்காய் இஞ்சி மரப்பா ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“