நெல்லிக்காய் பொடியுடன் நெய் சேர்த்து சாப்பிடுங்க… சுகர் குறையும்; டாக்டர் நித்யா
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறை மாற்றங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இவை இரத்தத்தில் உள்ள சுகரின் அளவைக் குறைக்க உதவும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறை மாற்றங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இவை இரத்தத்தில் உள்ள சுகரின் அளவைக் குறைக்க உதவும் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.
தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக, வயது பேதமின்றி இளம் வயதினர் பலரும் இதனால் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்களை மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
நெல்லிக்காயுடைய பயன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நெல்லிக்காயின் முக்கிய மருத்துவக் குணங்களில் ஒன்று இது ஆயுளை கூட்டும் காயகற்பமாகும் என டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
மேலும் இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் குறைப்பதற்கும் நெல்லிக்காயை பயன்படுத்தும் முறை பற்றி அவர் விளக்கி கூறியிருக்கிறார்.
அதற்கு முதலில் நெல்லிக்காய் பொடி எடுத்து அதில் நெல்லிக்காய் சாறு எடுத்து கலந்து வெயிலில் வைக்கவும். இதேமாதிரி மூன்று முறை செய்து காய வைத்துக் கொள்ளவும். பின்னர் நன்கு காய்ந்து வந்ததும் அதை எடுத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போதெல்லாம் இதை தேனில் குழைத்து ஒரு ஸ்பூன் சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இதனால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் மலச்சிக்கல், குடல் பகுதியில் இருக்கக்கூடிய கழிவுகள் வெளியேறவும் உதவும்.
தலைமுடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்களும் நெல்லிக்காய் பொடியை தேங்காய் எண்ணெயோடு சேர்த்து ஹேர் பேக் மாதிரி போட்டு வரலாம் தலைமுடி உதிர்தல் பிரச்சனையும் குணமாகும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.