உணவாக நாம் சாப்பிடும் அனைத்துமே உடலினுடைய ஆரோக்கியம் காத்திட உதவுகிறது. இப்படியாக நம் சமையல் அறையில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த ஒன்றை பற்றி மருத்துவர் கௌதமன் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
அப்படிப்பட்ட சோம்பு பத்து வகையான ஆரோக்கியத்தை தந்து வளமாக இருக்க நமக்கு துனண புரிகிறது.
(1) ஜீரக மண்டலத்தை செம்மை படுத்தி உணவுகள் சரியான முறையில் ஜீரணம் ஆகிட உதவுகிறது.
(2) உடம்பில் கொழுப்புகள் தங்குவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
Advertisment
Advertisements
3) மலச்சிக்கல் முற்றிலும் குணமடைய சோம்பு நீர் நல்ல மருந்தாக பயன்படுகிறது.
(4) இன்றைய பரவலாக உள்ள நீரிழிவு நோய் குணமாகிட சோம்பு நீர் நல்ல பயனளிக்கிறது.
(5) நாள்பட்ட உடல் சோர்வுகள் நீங்கிட காய்ச்சிய சோம்பு நீர் புத்துணர்ச்சி அளிக்கும்.
(6) இதயம் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுத்திட சோம்பை நாம் உணவில் சேர்ந்து கொள்ளலாம்.
(7) இனப்பெருக்கம் சம்மந்தமான தடைகளை நீக்கி கருமுட்டை வளர்ச்சி,நீர்கட்டிகள் கறைந்திட உதவுகிறது.
(8) உணவு அமிலம் உடல் அமிலமாக மாறி உணவுகள் அதன் பயனை நமக்கு தந்திட உதவுகிறது.
(9) பெண்களின் சூதக வலி,மாதவிலக்கு வலி, இரவில் உண்டாகும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
(10) முடக்கு வாதம் வலி, பாத வலி போன்ற வலிகள் குணமாக உதவுகிறது.
செய்முறை:
சோம்பு நீர் எப்படி செய்வது என்று பார்ப்போம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சோம்பு போட்டு கொதிக்க விட்டு முக்கால் டம்ளர் வந்ததும் எடுத்து குடிக்கலாம். சோம்புவின் பயன்கள் எண்ணிலடங்காதவை, அதன் பலன்கள் நமது உடம்பின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உறுதுனணயாக இருக்கிறது. நாம் அன்றாட உணவில் தினமும் பயன்பாட்டில் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.