அனிதா குப்புசாமி ஸ்பெஷல் சுவையான பாகற்காய் சாம்பார் எப்படி செய்வது என்று பார்ப்போம். கொஞ்சம் கூட கசப்பு இல்லாமல் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் அதை பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தக்காளி பாகற்காய் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை சின்ன வெங்காயம் துவரம் பருப்பு புளி கரைசல் சாம்பார் தூள் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் பெருங்காயம் மல்லித்தூள் கடுகு எண்ணெய் வெந்தயம் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு குக்கரில் துவரம் பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் இந்த பாகற்காயை வறுக்க வேண்டும். நன்கு சுருண்டு வந்ததும் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் எண்ணெய் கடுகு போட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் தூள், கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் ஒரு ஐந்து நிமிடம் கழித்து அதில் வறுத்து வைத்துள்ள பாகற்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரண்டு நிமிடம் விட்டுப் பின்னர் பருப்பையும் சேர்த்து விடவும். குழம்பு கொதிவரும் போது அதில் இந்த புளி கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு மேலே கொத்தமல்லி தலை தூவி இறக்கினால் சுவையான பாகற்காய் சாம்பார் ரெடி ஆகிவிடும்.