பாதாம் பிசின் பெண் குழந்தைகளின் உடல் நலத்தை பாதுகாக்க உதவுவதாக மருத்துவர் கௌதமன் கூறுகிறார். மேலும் இதுகுறித்து அவர் ஸ்ரீவர்மா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பெண் குழந்தைகளுக்கு தினமும் பாதாம் பிசின் கொடுத்து வர தலைமுடி உதிர்தல் முதல் மாதவிடாய் பிரச்சனை வரை பலவற்றிற்கு தீர்வாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாதாம் பிசின் பெண்களின் ஆரோக்கியத்திற்க்கு உகந்த அருமருந்து மேலும் இரவில் ஊறவைத்த பாதாம் பிசினை காலையில் சாப்பிட்டு வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உடல சருமத்தை பேணி, இளமையுடன் திகழ்ந்திட செய்கின்றது மற்றும் பொலிவான முகஅமைப்பு, தலைமுடி உதிர்வை நீக்கி, உடல் சூட்டை தனித்து பெண்களின் மாதவிலக்கு சார்ந்த பிரச்சனைகளை கடந்து வாழ்வதற்கு துணை நிற்கும்.
பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியம் தரக் கூடியது. இரவில் 1 தேக்கரண்டி பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்த உடன் அதை மென்று சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் மாற்றம் தெரியும். முகப் பொழிவு பெரும். தலைமுடி உதிர்தல் குறையும். தலைமுடி கருமையாக வளரும். உடல் சூடினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும். குழந்தைகள் ஆரோக்கியம் இருப்பர். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு இந்த பாதாம் பிசின் உதவும் என்றார்.
வெள்ளைப்படுதல் பல பெண்களும் சந்திக்கிற ஒரு பிரச்னை. தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை சாப்பிட்டு வர, இந்தப் பிரச்னை சரியாகும்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு முதல் அரணாக இருந்திடும் பாதாம் பிசின் ! Dr.கௌதமன்
கர்ப்பிணிகளுக்கு குறிப்பாக கோடைக் காலத்தில் மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு பாதாம் பிசினை ஊற வைத்துக் கொடுக்கலாம். பிரசவத்திற்கு பிறகு மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துவதிலும் பாதாம் பிசின் உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் யூரினரி இன்ஃபெக்ஷன் பிரச்னையையும் இது சரி செய்யும். சிறுநீரகத்தில் வருகிற கற்கள், சிறுநீர்ப் பாதையில் வளர்கிற சதை இரண்டையும் இந்தப் பிசின் கரைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.