உடல் தங்கம் போல மினுமினுக்க பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ, சி, பி உள்ளது. இவற்றை வாரத்தில் 2 முறை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் கோளாறுகள் நீங்கும் என மருத்துவர் கூறுகிறார்.
கண் இமைகளில் ஏற்படும் அழற்சி, கண்களில் எற்படும் நாள்பட்ட அழற்சி மற்றும் வெண்படல அழற்சி, கண் இமை வீக்கத்தை குணப்படுத்த இந்த கீரையை இரண்டு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
மேலும் பார்வை குறைதல் போன்ற அனைத்து கண் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு உண்டு.
பொன்னாங்கன்னி கீரை ஆரோக்கியமான சருமத்திற்கு உதவும். மேலும் பொன்னாங்கன்னி கீரை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி அழகு மேம்படும்.
பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால், இதயம் மற்றும் மூளை புத்துணர்வு அடையும் இதனால் நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“