கடந்த 200-300 ஆண்டுகளாக தேநீர் மற்றும் காபி மட்டுமே காலை பானங்களாக இருந்து வரும் நிலையில், நமது பாரம்பரியத்தில் பல நூற்றாண்டுகளாக உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் பானங்கள் இருந்துள்ளன என்பதை டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். குறிப்பாக, 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமூகத்தில் கரிசலாங்கண்ணி மற்றும் முசுமுசுக்கை கொண்டு தயாரிக்கப்பட்ட பானம் வழக்கத்தில் இருந்தது.
Advertisment
கரிசலாங்கண்ணி, தேவரஜன் என்று போற்றப்படும் ஒரு மூலிகை, பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. இருமல் மற்றும் சளிக்கு இது மிகச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும், இது நுரையீரலை வலுப்படுத்தவும் உதவுகிறது. துரதிர்ஷ்டவசமாக, கரிசலாங்கண்ணி பெரும்பாலும் நெல் வயல்களில் களைகளாகக் கருதப்பட்டு, களைக்கொல்லிகளால் அழிக்கப்படுகிறது.
சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனம், கனடாவின் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில், கோவிட்-19 தொற்று காலத்தில் கரிசலாங்கண்ணி உதவியாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள் நவீன அறிவியல் ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டு வருவது நம்பிக்கையளிக்கிறது.
எளிதில் வளரக்கூடிய மூலிகைகளான கரிசலாங்கண்ணி, நீர்முள்ளி, நெல்லிக்காய் பொடி மற்றும் ஆவாரம் பூக்களை தேநீராக மாற்றுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இவை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிப்பதுடன், மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Advertisment
Advertisements
வெள்ளை கரிசலாங்கண்ணி எடுத்து டீ வைத்து குடித்தால் சளி, கபம் மற்றும் நுரையீரலுக்கு நல்லது என்கிறார் சிவராமன். அதுமட்டுமின்றி நெல்லிக்காய் டீயை குடிக்கவும் அவர் கூறுகிறார்.
நெல்லிக்காய் டீ மட்டுமல்லாது, கரிசலாங்கண்ணி மற்றும் முசுமுசுக்கை போன்ற பாரம்பரிய மூலிகைகளை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை நாம் பெற முடியும். இது வெறும் பானம் மட்டுமல்ல, நமது பாரம்பரியத்தையும், இயற்கையையும் மதிக்கும் ஒரு வழியாகும் என்றும் கூறுகிறார்.
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான டீ குடித்து போர் அடித்து விட்டது என்றால் வெவ்வேறு மாதிரியான டீ அருந்தலாம். கிரீன் டீ, லெமன் டீ, நெல்லிக்காய் டீ, கரிசாலை டீ, ஆவாரம்பூ டீ போன்ற டீ வகைகளை எடுத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.