உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்க பல எளிய மற்றும் பயனுள்ள வழிகள் உள்ளன, அத்தகைய ஒரு வழி கருஞ்சீரகம் மற்றும் நெல்லிக்காயை உட்கொள்வது. இது இரண்டும் புற்று நோயின் ஆபத்தை கூட குறைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
நாம் அனைவரும் குடலில் உள்ள நல்ல நுண்ணுயிர்கள் வெறும் உடலின் ஆரோக்கியத்திற்கு மட்டும் தான் என்று நினைத்திருந்தோம் அனால் அது தவறு. நம் குடல் நன்றாக செயல்பட்டால் தான் நம் மூளையும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளும் நன்றாக இருக்கும்.
இன்றைக்கு இருக்க கூடிய குப்பை உணவுகளுக்கு மத்தியில் மிகவும் சத்தான உணவுகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உன்ன வேண்டும் நம் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், நோய் எதிப்பு சக்தியை மேம்படுத்தவும். இதற்க்கு நாம் நம்முடைய பாரம்பரிய மரபு உணவான இட்லி, தோசை, பொங்கல் என்று சாப்பிட வேண்டும்.
வருங்காலத்தில் இந்த குப்பை உணவுகளால் ஏற்படும் புற்று நோயை தடுப்பதற்கு நாம் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகளில் ஒன்று மணமூட்டிகள், அதாவது நம்முடைய பாரம்பரிய மசாலா பொருட்கள். இஞ்சி, சீரகம், பூண்டு, பெருங்காயம், வெந்தையம், கருஞ்சீரகம், மிளகு, இலவங்கப்பட்டை ஆகியவையை தினமும் ஏதோ ஒரு வகையில் உட்கொள்ள வேண்டும்.
தினசரி பருக கூடிய தேநீரில் சில மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். எப்படி அரிசியில் பல வகை இருக்கிறதோ அதே போல தேநீரில் நெல்லிக்காய் பொடி, கருசிலாங்கண்ணி பொடி இவற்றை சேர்த்து தேநீர் செய்யலாம். இதில் சில மசாலா பொருட்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த மசாலா பொருட்கள் பல வகையான புற்று நோயை தடுக்க உதவும். அதில் கருஞ்சீரகம் மிகவும் சத்தானது.
மார்பக்க்க புற்றுநோயை தடுப்பதற்கும் அதனுடைய ஆபத்தை குறைபத்திற்கும் கருஜீரகத்தை பயன்படுத்தலாம். மரணத்தை தவிர்த்து எதை வேண்டுமானாலும் குணப்படுத்தும் பண்புடையது இந்த கருஞ்சீரகம்.
Dr.Sivaraman Speech | தாயை விட கடுக்காய் சிறந்தது எதனால் தெரியுமா? | latest speech | Iriz Vision
அதே அளவுக்கு சத்தும் பழைமையும் நிறைந்த ஒரு உணவு தான் நெல்லிக்காய். இதில் மட்டும் தான் 6 சுவையும் இருக்கும். பெரிகளில் இருக்கும் சத்துக்களை விட அதிகமாக இதில் உண்டு.
நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் அதிகமாக உள்ளது. இதை குழந்தைகளுக்கும் நல்லது. அதை எவ்வளவு ஆரோக்கியமாக உட்கொள்ள முடியுமோ அப்படி உட்கொள்ள வேண்டும். அதனுடைய சுவையை அப்படியே ரஃஅசித்து சாப்பிட வேண்டும்.
அப்படி தினம் தினம் நம் ஊரு பாரம்பரிய உணவுகள், மணமூட்டிகள், கணைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து வந்தால் நிறைய அபாயகரமான நோய்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.