உடலில் இரும்புச்சத்து அதிகரிக்க தினமும் ஒருக்கைப்பிடி முருங்கை கீரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது,
வளரும் குழந்தைகளுக்கு 15 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதற்கு ஒருக்கைப்பிடி முருங்கை கீரை சாப்பிடலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் ஈரல் சாப்பிடலாம் என்று அவர் கூறுகிறார். அதுமட்டுமின்றி முருங்கை கீரை சாப்பிடுவதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். மேலும் இரும்புச்சத்துக்கு சுண்டல் பயறு வகைகளை சாப்பிடலாம்.
இரும்பு சத்து கிடைக்க ஒரு நாளைக்கு எவ்வளவு பேரிச்சம்பழம் சாப்பிடனும்? | Dr. Arunkumar
வயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சிக்கு முருங்கை உதவும். கணைய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முருங்கை உதவும், மேலும் இலைகள், பட்டை மற்றும் வேர்களில் புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
முருங்கை இலை சாறு வலி, சிவத்தல் மற்றும் திரவ வீக்கத்தைக் குறைக்க உதவும்.முருங்கை இலைகள் சத்தானவை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
முருங்கை கீரையில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் கல்சியம் உள்ளதால் இதை சாப்பிட்டால் இரத்த சோகை நோய் நீங்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.