கசப்பு சாப்பிட்டால்தான் சர்க்கரை நோய் குறையும் என்று பல நம்பி இருப்பார்கள் ஆனால் கசப்பை விட மற்றொரு சுவையை சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் குறையும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார். இதுகுறித்த அவர் டாக்டர் இன்டர்வியூ youtube பக்கத்தில் பேசியிருப்பதாவது.
துவர்ப்பு சுவை இருக்கக்கூடிய உணவுகளை சாப்பிட சாப்பிட சர்க்கரையின் அளவு கட்டுக்குள் ஆகும்.
கசப்பை விட துவர்ப்பு நேரடியாக ரத்தசர்க்கரை அளவை குறைக்கும். துவர்ப்பு சுவைக்கு அடுத்து கசப்பை எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் கசப்பை விட துவர்ப்பு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் என்கிறார்.
துவர்ப்பு என்று வரும்போது சுண்டைக்காய், அத்திப்பிஞ்சு, வாழைப்பூ போன்றவற்றையெல்லாம் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சுகர் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய முக்கியமான 3 உணவுகள்|Sugar patient food in tamil|Doctor Interview
ரத்த சர்க்கரை அளவில் நல்ல முன்னேற்றம் தெரியும். அதேபோல கசப்பில் பாகற்காய் சேர்த்து கொள்ளலாம்.
அதேமாதிரி ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உணவுடன் சேர்த்து உடற்பயிற்சி அவசியம். தினசரி நடைபயிற்சி, சரியான உணவு ஆகியவை ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.