பழங்கள் நார்ச்சத்து மிக்கவை. மேலும் இது ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது இடுப்பு சுற்றி உள்ள கொழுப்புகள், பி.எம்.ஐ, கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
அதிக உடல் எடை உடையவர்கள் எடையை குறைக்க விரும்பினால் பழங்கள் உறுதுணையாக இருக்கும். அப்படி இருக்க கூடிய பழங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பேரிக்காய்: பேரிக்காயில் நார்ச்சத்து உள்ளதால் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். எனவே தினமும் காலை பேரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீங்கள் அதிகமாக சாப்பிடு தூண்டும் உணர்வு தடுக்கப்படும். இதனால் உடல் எடையையும் சுலபமாக குறைத்து விடலாம்.
தர்பூசணி: வைட்டமின் சி, தாதுக்கள், லைகோபீன் மற்றும் தண்ணீரின் சிறந்த மூலமும் கூட. இரண்டு கப் தர்பூசணி எடுத்துகொள்வது மன நிறைவை அதிகரிக்க செய்யும். இது உடல் எடை, பி.எம்.ஐ மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எலுமிச்சை: வைட்டமின் சி நிறைந்தது. எலுமிச்சை தோல் சாறு உடலில் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிப்பதன் மூலம் அது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும். தொடர்ந்து 11 நாள் எலுமிச்சை சாறு எடுத்துகொள்வதன் மூலம் உடல் எடை, பி.எம்.ஐ, இடுப்பு சுற்றளவு, இன்சுலின் எதிர்ப்பு, உடல் கொழுப்பு சதவீதம் போன்றவற்றி மாற்றத்தை காணலாம்.
உடல் எடையை குறைக்கும் பழங்கள்! | Dr.M.S. Usha Nandhini
ஆப்பிள்: பீட்டா கரோட்டின், நீர், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினசரி ஒரு முழு ஆப்பிள் அல்லது ஆப்பிள் பழச்சாறு எடுத்துகொள்வதன் மூலம் எடை இழப்பு முடிவுகள் உறுதிபடுத்தப்பட்டது.
பப்பாளி: பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது தவிர அதில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், கார்கோஹைட்ரேட் போன்ற பிற ஊட்டச்சத்துகளும் உள்ளன. முக்கியமாக பப்பாளியை தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் குறையும் கூடுதலாக இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று மருத்துவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.