நம் வீடுகளில் சாதாரணமாக புற்களோடு ஒன்றாக வளரும் மூலிகளில் கூட அவ்வளவு நன்மைகள் உண்டு என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் அப்ப்டி நம் வீடுகளில் இருக்கும் நிலவேம்பில் எவ்வளவு பயன்கள் உண்டு என்று தெரியுமா? நிலவேம்பின் யாரும் அறியாத பயன்கள் பற்றி தான் மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
நிலவேம்பு:
இதன் இலையும் தண்டும் நல்ல கசப்பு தன்மை உடையது. ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்படும் இதை மருத்துவத்தில் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இதனை கசாயமாக எடுத்து கொள்ளலாம். டெங்கு நோய்க்கு இன்றும் கசயமாக விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலவேம்பு புற்றுநோய்கு நல்ல மருந்து. பாம்பு கடி, தேள் கடி போன்ற விஷக்கடிகளுக்கும் நல்லது. இதனை இன்றும் கிராமப்புரங்களில் விஷக்கடி மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தோல் அழற்சிகள் நீங்கும்.
நிலவேம்பு பயன்கள்:
புற்று நோய்: உயிரையே பறிக்கிற அளவுக்கு கொடுமையான நோய்கள் சிலவற்றை கூட நிலவேம்பால் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார். நிலவேம்பு புற்றுநோயை எதிர்த்து போராடவும் கல்லீரலின் நச்சுத்தன்மையை குறைக்கவும் உதவுகிறது.
நீரிழிவு: இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு உள்ளவர்கள் இதனை தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
விஷக்கடி: விஷக்கடிக்கு நிறைய மருந்துகள் இருந்தாலும் இன்றும் சித்த மருத்துவத்தில் நிலவேம்பு ஒரு முக்கிய மருந்தாக பயன்படுகிறது. இதனை வாயில் வைத்து கொண்டு காட்டுக்குள் சென்றால் கூட விஷ ஜந்துக்கள் கடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று கூறப்படுகிறது.
கஷாயம் செய்முறை: வீட்டில் எளிமையான முறையில் நிலவேம்பு கஷாயத்தை செய்ய முடியும்.
இதற்கு முதலில் 10 கிராம் நிலவேம்பு கஷாய பொடியை எடுத்து அதை 240மி.லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பிறகு அதை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு முறை 60மி.லி அளவில் இந்த கஷாயத்தை குடிக்கலாம். உணவுக்கு முன்பாக நிலவேம்பு கஷாயத்தை எடுத்துக் கொள்ளலாம்.
பொங்கல் சாப்பிடாவிட்டாலும் இந்த இலை சாப்பிட மறக்காதீங்க | allergy home remedies
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.