சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசை சப்பாத்தி என அனைத்திற்கும் தகுந்த மாதிரி பால் கீரை தொக்கு எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து உள்ளது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் வைட்டமின் - கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவும். அதுமட்டுமின்றி கண் பார்வை தெளிவாக தெரியவும், பிபி குறையவும் இதை எடுத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை
எண்ணெய்
வெங்காயம்
பூண்டு
மிளகாய் தூள்
கடுகு
வெந்தயம்
சீரகம்
வரமிளகாய்
பூண்டு
உப்பு
மஞ்சள் தூள்
கருவேப்பிலை
சீரகப்பொடி
கொத்தமல்லி தூள்
செய்முறை
பாலக்கீரை எடுத்து கழுவி அதன் காம்புகளோடு சிறிது சிறிதாக நறுக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் போட்டு நான்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, வெந்தயம், சீரகம், வரமிளகாய், இடிச்ச போல் பூண்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.
பாலக்கீரை தொக்கு சாதம் சப்பாத்தி இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும் | palak keerai thokku | palak
பின் இதில் தேவையான அளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து மேலே கருவேப்பிலை தூவி விட்டு மஞ்சள் தூள், சீரகப்பொடி, கொத்தமல்லி தூள் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.
அதில் உள்ள பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள பாலாக்கீரையை சேர்த்து வதக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். நன்கு கீரை வெந்து மசாலாக்களுடன் சேர்ந்து வருவதை காணலாம்.
கலர்ஃபுல் ஆகவும் இருக்கும் குழந்தைகள் டக்குனு சாப்பிடவும் ஆரம்பிப்பார்கள். எனவே இந்த ரெசிபியை செய்வதன் மூலம் குழந்தைகளையும் எளிதில் சாப்பிட வைக்கலாம்.
இந்த தகவல்கள் டுடேஸ் சமையல் என்ற யூடியூப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.