இந்தியாவில் அதிகப்படியான மக்கள் ரத்த சோகை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அதிகம் இரும்புச் சத்து குறைபாடு உள்ளது. அப்படி அனிமீயாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை தர வேண்டும்.
இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபின் உற்பத்திக்கு அவசியமான ஒன்றாகும். இது உடல் முழுவதும் ரத்த சிவப்பணுக்களில் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு உட்கொள்வது ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்கவும், இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கவும் அவசியமான ஒன்றாகும்.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படும் அதனால் சோர்வு, பலவீனம் மற்றும் வெளிர் தோல் ஆகியவை ஏற்படும். இதுவே அனிமீயாவின் அறிகுறிகளாகும்.
அந்த வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்று சித்த மருத்துவர் சிவராமன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
1. மாமிசம் சாப்பிடுபவர்கள் அதை தொடர்ந்து சாப்பிடலாம். அதில் அதிகம் இரும்புச்சத்து உள்ளது. அதுமட்டுமின்றி மற்ற சத்துக்களும் கிடைக்கும்.
2. சைவம் சாப்பிடுபவர்கள் அதிகம் காய்கறிகளை எடுத்து கொள்ள வேண்டியது அவசியம்.
3. பழங்கள் கீரைகள், பாலக்கீரை, பீட்ரூட், முருங்கை கீரை சாப்பிடலாம். குறிப்பாக கீரைகளில் ஏதாவது ஒரு கீரையை சாப்பிடலாம்.
இனி இரத்த சோகை பற்றி கவலை வேண்டாம்! Dr Sivaraman speech about Anemia & its remedy in Tamil | Health
4. பீட்ரூட் -பீட்ரூட்டை ஜூஸ் மாதிரி எடுத்து கொள்ளலாம் அதுமட்டுமின்றி அதன் மேல் உள்ள இலைகளை சாப்பிடலாம். கீரை பொறியல் செய்வது போலேயே செய்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும்.அதே சமயம் இரத்த அளவை அதிகரிக்கவும் உதவும்.
5. உலர்ந்த பழங்கள்: உலர் திராட்சைகள், அத்தி, பழங்கள் அதிகம் எடுத்து கொள்ளலாம். அத்தி இரும்புச்சத்தை அதிகரிக்கும்.
6. ஜூஸ் - மாதுளை மற்றும் தர்பூசணியை அதிகம் சாப்பிடலாம். இதை ஜூஸ் மாதிரி போட்டு இனிப்பு சேர்க்காமல் குடிக்கலாம். மேலும் சிறிது புதினா சேர்த்து கொள்ளலாம்.
7. நெல்லி - தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்து கொள்ளலாம். வயிறு சுத்தமாகும். மேலும் உடலில் ஹீமோகுளோபினை தக்க வைத்து கொள்ளும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.