சிறுநீரகக் கற்கள் பலருக்கும் ஒரு வேதனையான அனுபவத்தைக் கொடுக்கும். உடலில் நீர் பற்றாக்குறைதான் இதற்கு முக்கிய காரணம். சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் கழிவுப் பொருட்கள் சேர்ந்து கற்களாக உருவாகின்றன. இதனை கரைக்க உதவும் முக்கியமான இந்த பொருள் பிரியாணியில் சேர்க்கப்படுகிறது என்று டாக்டர் நித்யா மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
சிறுநீரகத்தில் கல் எங்க இருக்கு, சிறுநீர் பாதையில் வீக்கம் இருக்கா, இல்ல ரத்தம் வருதான்னு பார்க்குறது ரொம்ப முக்கியம். சில பேருக்கு சிறுநீர்ல ரத்தம் (hematuria) வரலாம். பால் மாதிரி திரவம் (cyluria) வந்தா அது தொற்றுநோயோட அறிகுறியா இருக்கலாம்.
பொதுவா நிறைய பேரு கால்சியம் ஆக்சலேட் கற்களால பாதிக்கப்படுறாங்க. ஆனா உணவில் கால்சியத்த சுத்தமா ஒதுக்குறது தப்பு. அப்படி பண்ணா கால்சியம் குறைபாடு வந்து எலும்புங்க வீக் ஆகிடும்.
நம்ம உணவுல நார்ச்சத்து அதிகமா இருக்கணும். பழங்கள், காய்கறிகள்னு தண்ணிச்சத்து உள்ள உணவுகள நிறைய சாப்பிடணும். பூசணி, சுரைக்காய் மாதிரியான காய்கறிகள் சாப்பாட்டுல சேர்த்துக்கோங்க. ஜூஸ் பண்ணியும் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
சிறுநீரக கல்லை கரைக்க பிரியாணி இலையை வைத்து கஷாயம் செய்து குடிக்கலாம் என்று டாக்டர் நித்யா கூறுகிறார். சிறுநீரகக் கற்களுக்கு ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம் தான் இந்த கஷாயம்.
செய்முறை: 3-4 பிரியாணி இலைகளையும், 2 ஏலக்காயையும் 3 கிளாஸ் தண்ணியில போட்டு கொதிக்க வைங்க. தண்ணி நல்லா சுண்டி 60மிலி ஆகுற வரைக்கும் கொதிக்க விடுங்க. இந்த கஷாயத்த தினமும் காலையில குடிக்க வேண்டும். ஒரு மாசம் வரைக்கும் இத தொடர்ந்து செஞ்சா நல்ல பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவத்துலையும் இதுக்கு நல்ல மருந்து இருக்கும்.
சிறிப்பிலை குடிநீர்: இந்த மருந்தை சாப்பாடு சாப்பிட்டதுக்கு அப்புறம், ஒரு நாளைக்கு ரெண்டு தடவை (காலை, இரவு) குடிக்கணும்.
சிறுநீரகக் கற்கள் பிரச்சினை இருக்கிறவங்க இந்த ஜூஸ்களையும் குடிக்கலாம்.
நெல்லிக்காய் ஜூஸ் வெள்ளை பூசணி ஜூஸ் மாதுளை ஜூஸ் அறுகம்புல் ஜூஸ்
கற்கள் எல்லாம் போனதுக்கு அப்புறமும், மறுபடியும் வராம இருக்க ஒரு மாசம் வரைக்கும் ஆரோக்கியமான உணவு முறைய கடைபிடிக்க வேண்டும். இது உங்க சிறுநீரகத்த ஆரோக்கியமா வச்சுக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.