சர்க்கரை அளவு குறையும் போது என்ன செய்ய வேண்டும் என்று சிலருக்கு தெரியாது. அப்படி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் அப்போது என்ன சாப்பிடலாம் என்றும் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும்போது பிஸ்கட் சாப்பிடலாமா கூடாதா என்று டாக்டர் சிவப்பிரகாஷ் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
இதுகுறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது, "சர்க்கரை அளவு குறையும் (Low Sugar) நேரத்தில் குளுக்கோஸ் இல்லாவிட்டால், வேறு எந்த உணவும் கிடைக்கவில்லை என்றால், பிஸ்கட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை அளவு குறைந்துவிட்டது என்றால், உடனடியாக பிஸ்கட் சாப்பிடலாம் என்பதை தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
உங்கள் சர்க்கரை அளவை உடனடியாக சரி செய்யக்கூடிய விஷயம் குளுக்கோஸ் மட்டும்தான். பிஸ்கட்ஸ் எதை சாப்பிட்டாலும் உங்கள் சர்க்கரை அளவு மெதுவாகத்தான் ஏறும். சர்க்கரை அளவு குறைவதன் அறிகுறிகள் அதிகமாக இருப்பதால், நீங்கள் நிறைய பிஸ்கட்ஸ் எடுத்துக்கொள்வீர்கள், அது சர்க்கரையை உயர்த்தும்.
சர்க்கரை அளவு குறைந்தால் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டியது குளுக்கோஸ். இரண்டு ஸ்பூன் குளுக்கோஸ் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடியாக சர்க்கரை அளவு சரியாக ஆகிவிடும். அதற்கு உடனடியாக அடுத்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு கிடைக்காத பட்சத்தில், வெளியில் இருக்கும்போது, வேறு எதுவும் சாப்பிட முடியாவிட்டால், அந்த நேரத்தில் பிஸ்கட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் " இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.