scorecardresearch

பாகற்காய் ஊறுகாய்.. சுகருக்கு நல்லது.. இப்பவே செய்ய ரெசிபி இதோ!

பாகற்காய் உடலில் இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

பாகற்காய் ஊறுகாய்.. சுகருக்கு நல்லது.. இப்பவே செய்ய ரெசிபி இதோ!

பாகற்காய் என்றாலே எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது அதன் கசப்பு தன்மை தான். பாகற்காய் கசக்கும் ஆனால் அதில் நிறைய ஆரோக்கியம் உள்ளது. பாகற்காய் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. மருத்துவர்களும் இதை உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். பாகற்காயின் கசப்பு தெரியாமல் உங்களுக்கு பிடித்தமான வகையில் செய்து உணவில் சேர்க்கலாம். பாகற்காய் குழம்பு, வத்தல் எனப் பலவகையாக செய்து சாப்பிடலாம்.

பாகற்காய் உடலில் இன்சுலின் அளவை சீராக வைக்க உதவுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பாகற்காயின் கசப்பு தெரியாமல் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை சாப்பிடலாம். அவ்வளவு நன்மைகள் இருக்கு. கேரளாவில் இது அதிகம் சாப்பிடுகின்றனர்.

பாகற்காய் ஊறுகாய்

தேவையான பொருட்கள்

பாகற்காய் – 7

வினிகர்/எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1/2 ஸ்பூன்

நல்லெண்ணெய் – 1 கப் அளவு

ஜீரகம் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மிளகாய் தூள், மஞ்சள் தூள் – தலா 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பாகற்காயை தண்ணீரில் கழுவி, நறுக்கி எடுத்துக் கொள்ளவும். வட்டமாக நறுக்கினால் நல்லது. நறுக்கிய பாகற்காயில் உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு இந்த பாகற்காயை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

தண்ணீரை வடித்து, பாகற்காயை துணியில் வைத்து 2 முதல் 3 மணி நேரம் காய வைக்கவும். இதற்கிடையில் மிக்ஸியில் பெருங்காயம், ஜீரகம், மிளகாய்தூள் உள்ளிட்ட மசாலா பொருட்களை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் பாகற்காய் மற்றும் மசாலா பொருட்கள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து கலக்கலாம்.

இப்போது மசாலா தடவிய பாகற்காயை வெயிலில் 4 முதல் 5 நாட்கள் காயவைக்கவும். தேவைப்படும் பட்சத்தில் எண்ணெய் ஊற்றி பொறித்துக் கொள்ளலாம்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Bitter gourd pickle recipe in tamil