கசப்பு என பெரும்பாலானோர் உணவில் ஒதுக்கி வைக்கும் பாகற்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம். சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். சர்க்கரை நோயாளிகள் வாரம் மூன்று முறை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய்
சின்ன வெங்காயம்
பூண்டு
மிளகாய்
கறிவேப்பிலை
புளி
கடுகு
உப்பு
எண்ணெய்
செய்முறை:
முதலில் பாகற்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து வட்டமாக வெட்டி கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பாகற்காயை வறுக்கவும்.
அதில் தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம்,பூண்டு,வத்தல்,புளி,உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும் பிறகு வெந்த பாகற்காயை சேர்த்து அரைக்கவும்.
இறுதியில் கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து அரைத்த பொருளுடன் சேர்த்தால் பாகற்காய் சட்னி ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“