கொஞ்சம் கூட கசப்பு தெரியாமல் சுவையான பாகற்காய் பொறியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மாதிரி எப்படி செய்வது என்று செஃப் தீனா யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1 கிலோ
தக்காளி - 3
வெங்காயம் - 1/4 கிலோ
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மல்லி தூள் - 3 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை - தேவையான அளவு
வெல்லத் தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 200 மில்லி
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு போட்டு அதை பொரிய விடவும்.
சின்ன சின்ன வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும். அது கருவேப்பிலை இஞ்சி பூண்டு பேஸ்ட் செட்டை கிளறவும்.
பச்சை வாசம் நீங்க ஏதும் நறுக்கிய தக்காளி போட்டு உப்பு கொஞ்சம் சேர்த்து வதக்கவும். பின்னர் பாகற்காய் கொஞ்சம் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்.
பச்சை புள்ள கூட சாப்பிடும் கசப்பே இருக்காது | கொங்கு ஸ்டைல் பாவக்கைப் பொரியல் | செஃப் தீனாவின் சமையலறை
பாகற்காய் வந்ததும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் போட்டு கிளறவும். உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். பின்னர் மசாலா பச்சை வாசனை நீங்கி பாகற்காய் வெந்து வந்ததும் சிறிது நாட்டு சர்க்கரையை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான பாகற்காய் ரெடி