பாகற்காய் என்பது தமிழ்நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. இது சுவையானது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. டாக்டர் சிவராமன் பாகற்காயை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைக்கும் முறைகளைப் பகிர்ந்துள்ளார்.
பாகற்காய் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. டாக்டர் சிவராமன் வீடியோவில் பாகற்காயை வறுவல், குழம்பு, பொரியல் போன்ற பல்வேறு வகைகளில் சமைக்கும் முறைகளை பற்றி கூறுகிறார்.
பாகற்காயை இப்படி செய்து சாப்பிடுங்க
பாகற்காய் ஒரு மலிவான மற்றும் எளிதில் கிடைக்கும் காய்கறி. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் ஹெல்த் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பாகற்காயை நறுக்கி எண்ணெயில் போட்டு வதக்கி வெல்லம் சேர்த்து செய்யக்கூடாது. அதனை கசப்பு சுவையிலேயே தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிவராமன் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்
பாகற்காய்
மிளகாய் வற்றல்
உப்பு
சின்ன வெங்காயம்
கடுகு
உளுந்தம் பருப்பு
கறிவேப்பிலை
தேங்காய் எண்ணெய்
செய்முறை
முதலில் பாகற்காயை கழுவி காம்பு நீக்கி வெட்டவும். மிளகாய் வற்றலை காம்பு நீக்கி ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளவும்.கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வெட்டவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அதில் நறுக்கிய பாகற்காய், தேவையான உப்பு சேர்த்து ஒரு சேரக் கிளறி மூடி வைத்து அடுப்பினை மிதமான தீயில் வைக்கவும். அவ்வப்போது மூடியை நீக்கி கிளறி விடவும்.
நன்கு வெந்ததும் சாப்பிட ஆரம்பிக்கலாம்.