நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை திசுக்களில் சேர்ப்பதும் திசுக்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதும் இரத்ததின் மூலம் தான் நடைபெறுகிறது. எனவே இரத்தம் என்பது நம் உடலில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் பாய்ந்து செல்கிறது.
இதனையே நாம் இரத்த ஓட்டம் என்று குறிப்பிடுகிறோம். ஆகையால் இரத்தம் நம் உடல் முழுவதற்கும் பரவுவதற்கு ஒரு விதமான அழுத்தம் இரத்தத்தால் செலுத்தப்படுகிறது.
இவ்வாறு தமனிகளில் செல்லும் இரத்த ஓட்டத்தில் செயல்படுத்தப்படும் அழுத்தம் இதயத் துடிப்பில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுவே இரத்த அழுத்தம் எனப்படுகிறது.
இன்றைய சூழலில் நிறைய பேருக்கு பிபி பிரச்சனை உள்ளது. அவற்றை எப்படி உணவு மூலமாகவே சரிசெய்யலாம் என்று மருத்துவர் நித்யா தனது நித்யா’ஸ் வரம் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இரத்தம் அழுத்தம் அதிகமாக இருந்தால் பித்தத்தை குறைக்க வேண்டும். அதற்கு எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்,
- எலுமிச்சை
- ஏலக்காய்
- சீரகம்
- சோம்பு
- தேற்றான்கொட்டை
- சதாவரி
போன்றவற்றை உணவில் சேர்க்கலாம் அல்லது எதாவது ஒரு வகையிலாவது இதனை உணவில் எடுக்கலாம். டீ, கசாயம் போன்று.
அதேபோல வெந்தய கீரை வாரம் 2 முறை எடுத்து கொள்ளலாம். பிபி பிரச்சனையை கட்டுப்படுத்த இது உதவும்.
சாப்பிடக்கூடாதவை
- எண்ணெய் பலகாரங்கள்
- உப்பு
- பெரும்பாலும் அசைவம் தவிர்கலாம்
- டீ,காபி, இனிப்புகள்
இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்த்து விட வேண்டியது அவசியம்.
அதற்கு பதிலாக டாக்டர் நித்யா ஒரு மீலிகை டீயை பரிந்துரைக்கிறார். அதற்கு துளசி விதைகள், ஏலக்காய், கிராம்பு, சோம்பு, தேற்றான்கொட்டை பொடி, அஸ்வகந்தா ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
Blood Pressure | இரத்த அழுத்தம் இருப்பவர்கள் செய்யக் கூடாத விஷயங்கள் என்னென்ன? - மருத்துவர் விளக்கம்
தினமும் காலையில் உணவுக்கு முன் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.