நெல்லி – இஞ்சி சாறுடன் அரை ஸ்பூன் இதை சேர்த்து குடிங்க… ரத்தம் சுத்தமாகி சரும பிரச்சனைகள் தீரும்; டாக்டர் நித்யா

நெல்லி மற்றும் இஞ்சி சாறு போன்றவற்றுடன் இன்னும் சில முக்கியமான பொருள்களை சேர்த்து சாப்பிடும் போது ரத்தம் சுத்தமாகி சரும பிரச்சனை நீங்கும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.

author-image
WebDesk
New Update
blood

ரத்தத்தை சுத்தம் செய்யும் ஜூஸ்

ரத்தத்தில் சேரும் நிறைய டாக்ஸ்சின்ஸ் தான் பல நோய்களுக்கு காரணமாகும். அதனால் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். ரத்தம் சுத்தமாக இருந்தால் நாம் இளமையாக இருப்போம். ரத்தத்தில் டாக்ஸ்சின்ஸ் நிறைய நிறைந்து இருப்பதனால் சோர்வான மற்றும் வறட்சியான தோல்கள், நிறம் மாறுதல், தோலில் அரிப்பு, தோலில் ஆங்காங்கே கருமை நிறம் இந்த மாதிரி பல பிரச்சனைகள் ஏற்படும்.

Advertisment

இதற்கு காரணம் நமது ரத்தத்தில் நிறைய டாக்ஸ்சின்ஸ் இருப்பது தான் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறியிருக்கிறார். மேற்படி தகவல்கள் பின்வருமாறு,  

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ரத்தத்தில் அதிக டாக்ஸின்ஸ்கள் இருந்தால் தோல் அரிப்பு ஏற்படும். இது முக்கிய அறிகுறியாகும். உடலில் கருமை நிறம் அதிகரிக்கும். எனவே இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய ஒரு ஜூஸ் பற்றி நித்யா கூறுகிறார்.  

மேலும் ரத்தத்தில் அதிக டாக்ஸ்சின்ஸ் இருப்பது சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிறுநீரகக் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.  சொரியாசிஸ், கொழுப்பு கட்டிகள் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. எனவே ரத்தத்தில் டாக்ஸின்களை குறைக்க என்ன ஜூஸ் குடிக்க வேண்டும் என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.

Advertisment
Advertisements

காலையில் நெல்லிக்காயுடன் இதை சேர்த்து குடியுங்கள் | Blood diesease | Dr.Nithya | MrLadies

ஜூஸ் செய்முறை: நெல்லிக்காய், இஞ்சி துண்டு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டாமல் வசம்பு தூள் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 20 நாட்கள் குடித்து வரலாம். 

முக்கியமாக அசைவம், உப்பு, புளி சேர்க்க கூடாது.  இன்றைய காலகட்டத்தில் முதலில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு காரணம் ரத்தத்தில் உள்ள டாக்ஸின்ஸ்கள் தான். எனவே இந்த ஜூஸ் குடித்து வர ரத்த டாக்ஸின்ஸ் குறையும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

blood blood circulation

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: