உடல் சூடு அதிகரிப்பதால் நம் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இது தோல், தலைமுடி உதிர்வு, உடலில் நீர்க்கொப்புளங்கள் வரும். எனவே இவற்றை உணவின் மூலம் எப்படி சரிசெய்யலாம் என்று மருத்துவர் நித்யா சத்குரு சாய் க்ரியேஷன்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
உடல் உஷ்ணத்திற்கு காரணம்:
காரம் நிறைந்த மற்றும் அதிக மசாலா பொருட்கள் சாப்பிடுவது உடல் உஷ்ணத்திற்கு முக்கிய காரணம். மேலும் காலநிலை மாறும் போது இதுமாதிரி உடல் உஷ்ணம் அடையலாம். அதிகம் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படலாம்.
உடல் பிரச்சனைகள்: உடல் உஷ்ணம் அதிகரித்தால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை, பித்த வெடிப்பு, சருமம் வறட்சி, சிறுநீர் தொற்று போன்ற பிரச்சனைகள ஏற்படும்.
தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய்
நல்லெண்ணெய்
குப்பைமேனி சாறு
முடக்கத்தான்
மூக்கிரட்டை
முருங்கை இலை
மேற்குறிப்பிட்ட பொருட்கள் அனைத்தையும் அரைத்து சாறு எடுத்து இவற்றை அரைத்து சாறு எடுத்து வைக்கவும்.
மூலிகை பொடிகள்
கடுக்காய்
அதிமதுரம்
கருஞ்சீரகம்
மிலக்கரனை
இவை அனைத்தையும் தனித்தானியாக பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் இப்போது தைலமாக காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு ஒரு கடாயில் இவை அனைத்தையும் சேர்த்து அதனுடன் 1 லிட்டர் விளக்கெண்ணெய் மற்றும் அரை லிட்ட நல்லெண்ணெய் சேர்த்து தைலம் மாதிரி மிதமான சூட்டில் வைத்து காய்ச்சி வடிகட்டி வைக்கவும். பின்னர் இதனை பயன்படுத்தலாம்.
முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த தைலத்துடன் சேர்த்து தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குளித்தால் உஷ்ணம் குறையும் வறட்சி நீங்கும். இதனை முகத்திற்கும் பயன்படுத்தலாம். மாதவிடாய் நேரத்தில் அடிவயிற்றில் தேயக்கலாம். கால் கை வெடிப்பு, முதுகுவலி உள்ள இடங்களிலும் தேய்த்து குளிக்கலாம்.
நோய்கள் வரக் காரணம்"உடல் சூடுதான்"உடல் சூட்டை தணிக்கும் "ஆமணக்கு தைலம்".
அதிக உஷ்ணம் இருந்தால் நீராகரத்துடன் சேர்த்து மாதம் ஒருமுறை குடிக்கலாம். 20 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் குடிக்க வேண்டும். காலை வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.