தினமும் காலையில் எழும்போது புத்துணர்ச்சியோடு எழ வேண்டும். நால் சிலருக்கு காலையில் எழும்போது சோர்வாக இருக்கும். அப்படி உணர்பவர்கள் தசை வலி, கொட்டாவி, சோர்வு, பாத வலி என்றெல்லாம் கூறுவார்கள். அப்படி இருப்பவர்களுக்களுக்கான ஒரு சரியான தீர்வை மருத்துவர் நித்யா ஹெல்த் கஃபே தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
முதலில் யாருக்கெல்லாம் காலையில் எழுந்ததும் உடல் சோர்வாக இருக்கும் என்று பார்க்கலாம்.
- இரத்தசோகை - உடலில் இரத்தம் குறைவாக உள்ளவர்களுக்கு எப்போதும் சோர்வாக இருக்கும். அதிகம் தூங்குவார்கள். எழ சோம்பேறித்தனமாக இருப்பார்கள்.
- இரவில் சரியான தூக்கமின்மை - குறட்டை பழக்கம் உடையவர்களுக்கு இரவில் சரியாக தூக்கம் வராது. அப்படி இருப்பவர்க்ளுக்கும் உடல் சோர்வாக இருக்கும்.
- அடிக்கடி சிறுநீரகம் - நீரிழிவு நோய் உள்ளவர்கள், கிட்னி கோளாறு உள்ளவர்களுக்கு எல்லாம் அடிக்கடி இரவில் சிறுநீரகம் கழிக்கும் பழக்கம் இருக்கும். அவர்களுக்கு உடல் சோர்வு அதிகமாக இருக்கும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கூடுதல் சோர்வு இருக்கும்.
- நீண்ட நாள் நோய்கள் - ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள். குறிப்பாக தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கு நீண்ட நாட்களாக மருந்து மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு சோர்வு இருக்கும்.
- முடக்குவாதம் - இதுமாதிரியான பிரச்சனை உள்ளவர்களுக்கு கால் வலி, எழு முடியாமல் தவிப்பது போன்ற பிரச்சனை இருக்கும்.
இதுமாதிரி பிரச்சனை உள்ளவர்கள் மருந்துகளுடன் சேர்த்து சித்த மருத்துவம் சார்ந்த மருந்துகளையும் எடுக்கலாம். அதற்கு காலையில் குடிக்கும் டீக்கு பதிலாக கூறப்படும் டீயை குடிக்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
துளசி இலை
துளசி விதை
சுக்கு
சீரகம்
கொத்தமல்லி
எலுமிச்சை சாறு
தேன்
செய்முறை
துளசி இலைகள், துளசி விதைகள் இரண்டையும் கழுவி வெயிலில் உலர்த்தி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
எப்பேர்ப்பட்ட உடல்வலியும் சட்டுன்னு நீங்க இந்த ஒரு Tea போதும் !
சுக்கு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றையும் வறுத்து அரைத்து அதில் சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் தண்ணீரை கொதி விட்டு அதில் இந்த துளசி பவுடரை சேர்த்து கலந்து எலுமிச்சை பழம் சாறு, தேன் கலந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.