எலும்பு உறுதியாக இருக்க உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எலும்பு ஆரோக்கியத்துக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் தேவை. இவற்றில் ஒன்று குறைபாட்டுடன் இருந்தாலும் அவை எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எலும்புகளுக்கு சிறந்த சத்து கால்சியம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இதை பாலில் இருந்து மட்டும் அல்ல. அதிகமான காய்கறிகளில் இருந்தும் பெறலாம். காய்கறிகள், கீரைகள் எலும்புகளுக்கு உதவும். எலும்புகளின் வலிமையை அதிகரிக்க செய்யும் சூப்பர் உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
புடலங்காய் முதல் அவரைக்காய் வரை உள்ள அனைத்து காய்கறிகளையும் சாப்பிடலாம்.
மஞ்சள் எல்லா உணவு வகைகளிலும் சேர்க்கலாம். சிறிது நெய் மஞ்சள் சேர்த்து சாதத்துடன் சாப்பிடலாம்.
மேலும் புரதம் சார்ந்த உணவுகளான நாட்டு சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடலாம். எலும்பு சக்திக்கு உதவும் காய்கறிகள் என்னென்ன என்று பார்க்கலாம். வெளிப்பகுதி கடினமாகவும் உட்புறம் மெல்லிசாகவும் உள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிடலாம்.
முருங்கைக்காய்
வெண்டைக்காய்
பீர்க்கஙகாய்
புடலைங்காய் இது நீண்ட எலும்புகள் பலப்படுத்த உதவும். முதுகு தண்டு பிரச்சனை உள்ளவர்கள் அதிகம் சாப்பிடலாம்.
அவரைக்காய்
சுண்டைக்காய்
மேலும் பழங்களையும் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளலாம். அதுவும் எலும்பு சக்திக்கு உதவும். தினசரி ஃப்ரூட் சாலட் மாதிரி சாப்பிடலாம். என்னென்னெ பழ வகைகள் எலும்பு சக்திக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.
ஆப்பிள்
வாழைப்பழம்
கொய்யாப்பழம்
ஆரஞ்சு
மாதுளை
முலாம் பழம்
பப்பாளி
திராட்சை
முந்திரி
இவற்றில் உள்ள பழ வகைகள் தினசரி எளிதில் நமக்கு கிடைக்க கூடியது. தான் இவற்றை ஜூஸ் வடிவில் குடிப்பதை விட கடித்து மென்று சாப்பிடுவது உடலுக்கும் எலும்புக்கும் இன்னும் நல்லது.
எப்போதும் போல கீரையில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. அதேபோல எலும்பு சக்திக்கும் இரண்டு கீரைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பசலை கீரை
முருங்கைகீரை
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“