எலும்புகள் சார்ந்த பிரச்சினைகள் கழுத்து எலும்பு தேய்மானம், இடுப்பு எலும்பு தேய்மானம், மூட்டுகளில் எலும்புகள் தேய்மானம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு அதிக கால்சியம் தேவைப்படுகிறது. அப்படி அதிக கால்சியம் இருக்கக்கூடிய உணவு ஒன்றை பற்றியும் அதனை எப்படி சாப்பிடுவது பற்றியும் டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
எலும்பு தேய்மானம், மூட்டு வலி இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முதலில் உடலில் கால்சியம் சத்து அதிகம் இருக்க வேண்டும். கால்சியம் சத்து பற்றாக்குறையே இது மாதிரியான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார்.
அப்படி கால்சியம் சத்து அதிகம் இருக்கக்கூடிய ஒரு உணவுதான் மூங்கில் அரிசி இந்த மூங்கில் அரிசியில் கஞ்சி வைத்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரிக்கும். மேலும் இது போன்ற பிரச்சனைகளும் குறையும் பிரச்சனைகள் வராமலும் தடுக்கும் என்கிறார்.
மூங்கில் அரிசியில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. இந்த மூங்கில் அரிசியை கஞ்சியாக தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். காலை, மாலை இரண்டு வேளையும் இதை கஞ்சி வைத்து குடிக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் இந்த கஞ்சி குடிக்கலாம்.
தேவையான பொருட்கள்
மூங்கில் அரிசி
முருங்கை இலை சாறு
உப்பு
இஞ்சி
பூண்டு
வெந்தயம்
சீரகம்
செய்முறை
மூங்கில் அரிசியை நன்கு கழுவி முருங்கை இலை சாறு எடுத்து அதில் இந்த மூங்கில் அரிசியை ஊற வைக்கவும்.
ஊற வைத்த பிறகு அதை நன்கு வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த மாவை காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்து அவ்வப்போது பயன்படுத்தலாம்.
எலும்பு தேய்மானம்,மூட்டு வலிக்கு சிறந்த உணவு...
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு மாவு போட்டு கட்டி இல்லாமல் கரைக்கவும். பின்னர் சுவைக்கேற்ப உப்பு போடவும். அடுத்ததாக மிக்ஸி ஜாரில் பூண்டு, வெந்தயம், சீரகம், இஞ்சி ஆகியவற்றை அரைத்து மாவுடன் சேர்த்து கொதிக்கவிட்டு கஞ்சி மாதிரிரெடி செய்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.