மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவை வந்தால் கூட அதிகம் பாதிக்காமல் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். உடம்பில் சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலிமையைத் தருகிறது.
அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த மாப்பிளை சம்பா அரிசியில் தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த தோசையை காலையில் டிபனாக சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை பயிறு
மாப்பிளை சம்பா
உப்பு
செய்முறை:
ஒரு கப்பில் பச்சை பயிறு, மாப்பிள்ளை சம்பா அரிசி சேர்த்து கழுவி 5 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மாவு பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது உப்பு சேர்த்து புளிக்க விடவும் மாவு புளித்து வந்ததும். தோசை அல்லது இட்லி கூட செய்து சாப்பிடலாம்.
உடல் வலிமையை மேம்படுத்த தினமும் சாப்பிடுங்க சத்தான காலை உணவு/ மாப்பிள்ளை சம்பா அரிசி தோசை/
இதற்கு எப்போதும் போல சாம்பார், சட்னி ருசியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“