Advertisment

இந்தக் காயுடன் கொஞ்சம் சீரகம், லெமன் ஜூஸ்… இவ்ளோ நன்மை இருக்கு!

சுரைக்காய் உடன் கொஞ்சம் சீரகம், லெமன் ஜூஸ் செய்து சாப்பிட்டால் நிறைய நன்மை இருக்கிறது என்று ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தக் காயுடன் கொஞ்சம் சீரகம், லெமன் ஜூஸ்… இவ்ளோ நன்மை இருக்கு!

சுரைக்காய் ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. அதுமட்டுமல்ல சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

Advertisment

சுரைக்காய் பல அற்புதமான ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இந்த பச்சை காய்கறியை மக்கள் தங்கள் எடையைக் குறைப்பதற்கும் அல்லது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் சாப்பிடுகிறார்கள். சுரைக்காய் வேண்டுமானால் சப்புனு இருக்கலாம். ஆனால், அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் மிகவும் சுவாரசியமானது. சுரைக்காயை கோஃப்தா, பர்தா, அல்வா, மிருதுவான பஜ்ஜி என பல சுவையான ரெசிபிகளாக செய்யலாம். இருப்பினும், சுரைக்காய் ஜூஸ் ஆரோக்கிய நிபுணர்கள் இடையே மிகவும் பிரபலமானது.

சுரைக்காய் பொதுவாக வட்டமானது அல்லது பாட்டில் வடிவத்தில் இருக்கும். சுரைக்காயை சில நிமிடங்களில் சமைக்கலாம்.

சுரைக்காய் ஜூஸ் இதய ஆரோக்கியத்திற்கும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. சுரைக்காய் ஜூஸ் உடலில் இருந்து நச்சுகளை நீக்குவதால், பளபளப்பான சருமத்தையும் கொடுக்கும். இது இளநரையைத் தடுத்து நிறுத்துகிறது.

“பச்சைக் காய்கறிகள் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களின் களஞ்சியமாக அறியப்படுகிறது. அத்தகைய ஊட்டச்சத்து மிக்க காய்கறிகளில் ஒன்று அனைவரின் வீட்டில் தோட்டத்தில் விளையும் சுரைக்காய். இந்த சுரைக்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அது மட்டுமல்ல. உடலைக் குளிர்ச்சி அடையச் செய்கிறது. அதே நேரத்தில், இது இரத்த அழுத்தத்தையும் சரி செய்கிறது. இளநரை, சருமச் சுருக்கங்களைப் போக்க உதவுகிறது. சுரைக்காய் உடல் ஆரோக்கியத்தை சீராக வைப்பதோடு, அழகு தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது” என்று டாக்டர் டிக்சா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதியுள்ளார்.

உடலை இயற்கையாக சுத்தப்படுத்தும் சுரைக்காய்

சுரைக்காய் ஜூஸ் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்குகிறது. கொழுப்பை கரைக்கும் திட்டங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, உங்கள் அருகிலுள்ள ஒரு கடையில் ஒரு சுரைக்காயை வாங்கி சாப்பிடுங்கள்.

இளநரையைத் தடுக்கும் சுரைக்காய்

சுரைக்காய் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். சுரைக்காய் சாற்றை உச்சந்தலையில் தடவினால் வழுக்கை மற்றும் இளநரை போன்றவை நீங்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது சுரைக்காய்

சுரைக்காய் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. சுரைக்காய் ஒரு கார்டியோ-டானிக் மற்றும் டையூரிடிக். இது இயற்கையாகவே குளிர்ச்சியானது. சுரைக்காய் வலி, புண், காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. ஏனெனில், இது வாதத்தையும் பித்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.

சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் அற்புதமாக செயல்படும் சுரைக்காய்

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துவதில் அற்புதமாக செயல்படுகிறது. சில நாடுகளில், சுரைக்காய் நீரிழிவு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

டாக்டர் பாவ்சர் குளிர்காலத்திற்கான சுரைக்காய் ஜூஸ் செய்முறையை இன்ஸ்டாவில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதை வீட்டில் எளிதாக செய்யலாம்.

குளிர்காலத்திற்கான சுரைக்காய் ஜூஸ் செய்முறை:

தேவையான பொருட்கள்

• 2 நடுத்தர அளவிலான சுரைக்காய் தோலுரித்து, விதை நீக்கி, நறுக்கியது

• சீரகம் 1 தேக்கரண்டி

• 15 முதல் 20 புதினா இலைகள்

• எலுமிச்சை சாறு 2 முதல் 3 தேக்கரண்டி

உங்கள் அளவாக உப்பு (இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகள் உப்பு சேர்க்க வேண்டாம்.)

செய்முறை:

  • ஒரு மிக்சியில் சுரைக்காய் துண்டுகள், இஞ்சி, புதினா இலைகள், உப்பு மற்றும் சீரகம் எடுத்து போடுங்கள்.
  • அடுத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3-4 நிமிடங்கள் அரையுங்கள்.
  • எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்குங்கள்.

தினமும் அதிகாலையில் இந்த ஜூஸை வடிகட்டி குடியுங்கள்.

  • இந்தியாவில் இப்போது குளிர்காலம் என்பதால், சுரைக்காயை ஜூஸ் செய்வதற்கு முன்பு அதை வேக வைப்பது நல்லது என்று கூறுகிறார். வேகவைப்பதால், சளி அல்லது இருமல் பிடிக்காது இதமாகவும் இருக்கும். வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கு பச்சையான சுரைக்காய் ஜூஸ் ஜீரணிக்க கடினமாக இருக்கும். எனவே வேகவைத்து பயன்படுத்துவது சிறந்தது.

காலையில் சுரைக்காய் ஜூஸை முதலில் சாப்பிட்டால், அந்த நாள் முழுவதும் உங்களுக்கு இதமாகவும் சௌகரியமாகவும் இருக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Healthy Food Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment