க்ரானிக் ஃபிட்டிக் சிண்ட்ரோம் என்பது நீண்ட நாட்களாக உடலில் வலி, சோர்வு, மன சோர்வு, சுறுசுறுப்பு இல்லாத நிலை ஆகும். இதற்கு பல காரணங்கள் உள்ளதாகவும் அதற்கான தீர்வு குறித்தும் மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் சித்தா டாக்டர் நித்யா கூறி இருக்கும் தகவல்கள் வருமாறு,
க்ரானிக் ஃபிட்டிக் சிண்ட்ரோம் காரணங்கள்
- தூக்கமின்மை - சரியான உறக்கம் இல்லாதது, இரவு நேர வேலை அல்லது மாறுபட்ட வேலையால் தூக்கம் பாதிப்பு மற்றும் முறையற்ற இடைவேளை தூக்கம்.
- நீரிழிவு- சர்க்கரை நோயாளிகளுக்கு உடல் சோர்வு என்பது சாதாரண ஒன்றுதான். ஆனால் அதீத சோர்வு இருப்பவர்களுக்கு இதுதான் காரணம்.
- அதுமட்டுமின்றி தைராய்டு, ரத்த கொதிப்பு, ஹார்மோன் இம்பேலன்ஸ்,
கால்சியம் குறைபாடு இதுமாதிரியான பிரச்சனை உள்ளவர்களுக்கும் வரலாம்.
இதற்கு சித்த மருத்துவத்தில் மிளகு திப்பிலி அந்திமந்தாரை போன்ற மூலிகைகள் உள்ளது. இதுமாதிரி அதிக உடல் வலி, உடல் சோர்வு உள்ளவர்களுக்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
அதற்கான மூலிகைகள்: மாசிக்காய், மிளகு, திப்பிலி
மாசிக்காய் கற்பம் உடல் வலி, சோர்வு போக்க கூடியது. நாட்டுமருந்து கடைகளில் வாங்கி மருத்துவர்கள் கூறும் அறிவுரை படி எடுத்து கொள்ளலாம்.
மிளகு - தேவையான அளவு மிளகு எடுத்து நன்கு பாலில் கொதிக்க விட்டு வெயிலில் உலர்த்தி ஒரு 2 முதல் 3 மிளகை வெற்றிலையில் மடித்து ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிடலாம்.
சுகர் தைராய்டு BP இருக்கா | Diabetes , Thyroid , Bloodpressure | Control tips | Dr.Nithya | Mrladies
திப்பிலி - சூரணமாக கடையில் வாங்கி தேன் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.
தைலம் - பல வகையான மூலிகை தைலங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அவற்றை வாங்கி உடலில் தேய்த்து ஒரு 20 நிமிடம் கழித்து நல்ல வெந்நீர் வைத்து குளிக்க வேண்டும். பின்னர் தைலம் தேய்த்த பின்னர் சூடான சாதம் வடித்த கஞ்சியையும் வலி இருக்கும் இடங்களில் தடவலாம்.
இதோடு சேர்த்து நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உணவு முறையும் தான் குணப்படுத்தும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.