சீக்கிரம் வெயிட் லாஸ் ஆகணுமா? இனி இத மட்டும் சாப்பிடுங்க; 10 நாளில் செம்ம ரிசல்ட் இருக்கு!
உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான உணவு முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் சுமார் 10 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க எந்த மாதிரியான உணவு முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இதன் மூலம் சுமார் 10 நாட்களில் உடல் எடையை குறைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
உடல் எடையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உடல் எடையின் காரணமாக பல்வேறு இணை நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் உடல் எடையை குறைக்க நாம் செய்ய வேண்டிய உணவு முறை மாற்றம் குறித்து மகிழ்ச்சி உடல் நலம் என்ற யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை இப்பதிவில் காணலாம்.
Advertisment
பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்றவற்றை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவற்றில் இருக்கும் அதிகப்படியான மாவுச் சத்து உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது. இதற்கு மாற்றாக வேறு சில பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அதன்படி, காலை நேரத்தில் பார்லி கஞ்சி குடிக்கலாம். இதற்காக பார்லியை பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். கால் லிட்டர் தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இதில் பார்லி பொடி 2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். இந்த தண்ணீர் சுமார் பாதியளவாக குறையும் வரை காய்க்க வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்தால் பார்லி கஞ்சி தயாராகி விடும்
இந்த பார்லி கஞ்சியை காலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். இதில் வைட்டமின் பி, நார்ச்சத்து போன்றவை இருக்கின்றன. இவ்வாறு தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்பற்றும் போது உடல் எடை குறைவதை நம்மால் உணர முடியும். மேலும், இதை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது நம்முடைய ஆரோக்கியம் மேம்படும்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.