பழைய சோறு ஒரு சிறந்த பாரம்பரிய உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு உதவும் என்று டாக்டர் மைதில் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். புற்றுநோய் செல்களை தடுக்க உதவும் ஏஜென்ட்கள் இதில் உள்ளது என்றும் கூறுகிறார். மேலும் அவர் கூறிய பாரம்பரிய உணவான பழைய சோற்றின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
Advertisment
பழைய சோற்றில் உள்ள புரோபயாடிக்குகள் (probiotics) குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை மேம்படுத்துகின்றன. ஆரோக்கியமான குடல் மைக்ரோபயோட்டா, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, புற்றுநோய் தடுப்பில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது.
பழைய சோற்றில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஆரோக்கியமான குடல், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
பழைய சோறு நொதித்தல் செயல்பாட்டின் போது உருவாகும் சில பொருட்கள், உடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம். இது நேரடியாக புற்றுநோயை தடுக்கும் என்று சொல்ல முடியாது என்றாலும், ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைக்கும்.
Advertisment
Advertisements
உடல் சூடு குறையும்: பழைய சோறு உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சோர்வு நீங்கும்: வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடல் சோர்வை நீக்குகிறது.
எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்: கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
இரத்த சோகைக்கு நல்லது: தினமும் தயிருடன் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நீங்கும்.
செரிமானம் மேம்படும்: குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகின்றன. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பி6 மற்றும் பி12 வைட்டமின்கள் உள்ளன.
எளிதில் ஜீரணமாகும் சத்துக்கள்: மாவுச்சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்: புற்றுநோய் செல்களை தடுக்க உதவும் ஏஜென்ட்கள் உள்ளன.
மன ஆரோக்கியம் மேம்படும்: மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்: நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.