பயணம் செய்வது புத்துணர்ச்சியூட்டுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும். பயணம் மேற்கொள்ளும்போது மக்கள் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை அதிகமாக உட்கொள்கின்றனர். இது அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
இந்த பொதுவான செரிமான கவலைகள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மந்தமாக்கி, வீக்கம், அமிலத்தன்மை, வாயு மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
ஊட்டச்சத்து நிபுணர் நிதி குப்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது, “ஆரோக்கியமற்ற உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதால், அமிலத்தன்மையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது,” என்றார். இதற்கான நிவாரணமாக வீட்டில் செய்யக்கூடிய எளிமையான மருந்துகளை அணுகலாம்.
“எனவே, இது போன்ற பிரச்னைகள் உங்கள் பயணத் திட்டங்களை அழிக்க விடாதீர்கள்; நீங்கள் பயணிக்கும்போது வயிற்றில் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், ஆயுர்வேதம் மற்றும் குட் ஹெல்த் பயிற்சியாளர் டாக்டர் டிம்பிள் ஜங்தா பரிந்துரைத்த இந்த உணவுப் பொருட்களை உங்கள் கேரி பேக்கில் எடுத்து செல்லுங்கள்”, என்று மேலும் குறிப்பிட்டார்.
பெருஞ்சீரகம் விதைகள்: பெருஞ்சீரகம் விதைகள் கார்மினேடிவ் என்று நிபுணர் விளக்கினார். அவர் பட்டியலிட்ட மற்ற நன்மைகளில் அடங்கும் – “ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள், குறைந்த கலோரிகள் மற்றும் வைட்டமின்-சி ஆகியவை அடங்கியுள்ளது.
இது ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் நிலையற்ற மூலக்கூறுகளால் ஏற்படும் செல்லுலார் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
” விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத பிற தாதுக்கள் உள்ளன, அதில் “பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் மாங்கனீசு” ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
“என்சைம் செயல்படுத்தல், வளர்சிதை மாற்றம், செல்லுலார் பாதுகாப்பு, எலும்பு வளர்ச்சி, இரத்த சர்க்கரை ஒழுங்குமுறை மற்றும் காயம் குணப்படுத்துவதற்கு மாங்கனீஸ் முக்கியமானது,” என்று அவர் மேலும் கூறினார்.
வெந்தயம் விதைகளை உலர்ந்த கடாயில் வறுத்து, அவற்றை உங்கள் சிறிய பாட்டிலில் சேமித்து வைக்கவும். “ஒவ்வொரு உணவிற்கும் 1 டீஸ்பூன் சாப்பிடுங்கள். இது வீக்கம் மற்றும் அஜீரணத்தைத் தடுக்க உதவுகிறது”, என்று அவர் மேலும் கூறினார்.
ஏலக்காய்: மசாலாவின் இயற்கையான குளிர்ச்சியின் விளைவு மற்றும் அதனின் சுவை, நீங்கள் உணவுக்குப் பின் சாப்பிடும்போது புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
“உணவுக்குப் பிறகு சர்க்கரையுடன் ஏலக்காயை மென்று சாப்பிடுங்கள்,” என்று அவர் கூறினார், “அசௌகரியம், குமட்டல் மற்றும் வாந்தி” ஆகியவற்றிலிருந்து விடுபட இது பெரும்பாலும் மற்ற மருத்துவ மசாலாப் பொருட்களுடன் கலக்கப்படுகிறது.
எலுமிச்சை: பயணம் செய்யும் போது பலருக்கு குமட்டல் ஏற்படும். எனவே, “எலுமிச்சம்பழத்தின் மேற்பரப்பை முகர்ந்து பார்ப்பது தீர்வாக அமையும்” என்று நிபுணர் மேலும் கூறினார். “செரிமானத்தை மேம்படுத்த உதவும் உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பின் நீங்கள் எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் குடிக்கலாம்”, என்றார்.
மேலும் தெளிவுபடுத்துகையில், எலுமிச்சை சாற்றில் காணப்படும் சிட்ரிக் அமிலம் இரைப்பை அமில சுரப்பை (வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான திரவம்) அதிகரிக்க உதவுகிறது, இது உடலில் ஜீரணிக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
அசாஃபோடிடா: இது பல ஆசிய நாடுகளில் காணப்படும் காரமான மசாலா ஆகும். “ஒரு சிறிய சிட்டிகையை 5 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து, உணவுக்குப் பின் பருகினால், வீக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்” என்று நிபுணர் பரிந்துரைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil