இரும்புச் சத்து நிறைந்த முருங்கை கீரையை வாரத்தில் மூன்று முறையாவது எடுத்து கொள்ள வேண்டும். முருங்கை இலையை சுத்தம் செய்து பொறியல், கூட்டு, ரசம் போன்று எந்த வடிவில் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். முருங்கை இலையை வைத்து சுவையான செஃப் தீனா ஸ்டைலில் பொறியல் எப்படி செய்வது என்று அவரது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தேவையான பொருட்கள்
முருங்கை இலை
வேர்க்கடலை
உளுத்தம் பருப்பு
காய்ந்த மிளகாய்
பூண்டு
மஞ்சள் தூள்
கடுகு
உப்பு
பெருங்காயம்
நல்லெண்ணெய்
செய்முறை
முருங்கைக் கீரையை எடுத்து சுத்தம் செய்து வைக்கவும். பின்னர் ஒரு கடாயில் வேர்க்கடலையை போட்டு நன்கு வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, இடிச்ச பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
முருங்கை கீரை பொரியல் | முருங்கைக்காய்/முருங்கை இலைகள் சமையல் | சிடிகே 487 | செஃப் தீனாவின் சமையலறை
அதில் கீரையை போட்டு வதங்கி தண்ணீர் விட்டு வந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி வேக விட்டு இறக்கவும். அவ்வளவு தான் சுவையான முருங்கை கீரை பொறியல் ரெடி.
முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான நோயெதிர்ப்பு மண்டலத்தை நிர்வகிக்க உதவும். மேலும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.