பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். மேலும் முகம் பொலிவு மற்றும் முக சுருக்கம் நீங்கவும் தலை முடி வளர்ச்சிக்கும் பாதாம் சிறந்த ஒன்றாக இருக்கும். அப்படிப்பட்ட பாதாமை வைத்து ஒரு சுவையான ஸ்வீட் பாதாம் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்த பாதாம் அல்வா சிறிது சாப்பிட்டாலே போதும் வயிறு நிறைந்துவிடும். ஏனென்றால் அவ்வளவு தித்திப்பாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பால்
பாதாம்
சர்க்கரை
நெய்
உப்பு
குங்குமப்பூ
செய்முறை
தேவையான அளவு பாதாம் எடுத்து தண்ணீரில் ஊற வைத்து தோல் உறித்து எடுத்து கொள்ளவும். பின்னர் இதை ஈரப்பதத்துடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
ஒரு கடாயில் பால் ஊற்றி சூடானதும் பாதாம் பேஸ்ட் சேர்த்து கலந்து விடவும். அதில் குங்குமப்பூ சேர்த்து மீடியம் ஃப்ளேமில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறவும்.
பின்னர் நெய் பாதாம் வாசம் வரும்போது சர்க்கரை போட்டு கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் அடிப்பிடித்து விடும். பின்னர் இதில் சிறிது உப்பு மட்டும் சேர்க்கவும்.
Venkatesh Bhat makes Badam Halwa |CC | Badam Halwa | Royal Sweets | Indian Mithai | Diwali Sweets
உப்பு சுவையை கூட்டிக்கொடுக்கும். பின்னர் நெய் சிறிது சிறிதாக ஊற்றி கிளறியதும் அது கடாயில் ஒட்டாமல் நெய் பிரிந்து வரும்போது மீண்டும் கூடுதல் நெய் ஊற்றினால் சுவை கூடுதலாக இருக்கும். பின்னர் இதை இறக்கி மேலே சிறிது துருவிய பாதாம் போட்டு பரிமாறலாம்.
இனிப்பு என்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“