செப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் கும்பகோணம் கடம்பா எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பாசிப்பருப்பு – 100கிராம்
உருளைக்கிழங்கு - 2
Advertisment
Advertisements
தேங்காய் – ஒரு மூடி
சோம்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
கசகசா ஒரு டேபிள் ஸ்பூன்
கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கருவெப்பிலை ஒரு கைப்பிடி
பிரியாணி இலை – 1
பட்டை 2 துண்டு
பூண்டு நறுக்கியது – 1 அரை ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
மஞ்சள் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி
செய்முறை:
முதலில் பாசிப்பருப்பு மற்றும உருளைக்கிழங்கை தனியாக வேக வைத்து எடுத்தக்கொள்ளவும். அடுத்து தேங்காய், சோம்பு, பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்ணீர்விட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பானை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், கடுகு, சேர்த்து தாளித்து அதனுடன், சீரகம், கருவேப்பிலை, பிரியாணி இலை, பட்டை நறுக்கிய வெங்காயம் ஆகியற்றை சேர்த்து வணக்கவும்.
அடுத்து இதனுடன் தக்காளி சேர்த்து, வணக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை உடைத்து அதனுடன் சேர்த்து கிளரவும்.
அடுத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை அதிகமாக தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இறுதியாக வேக வைத்து தனியாக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து கிண்டி மல்லி இலை சேர்த்து இறக்கினால் சுவையான கும்பகோணம் கடப்பா ரெடி.