உடம்பில் பல அதிசயங்களை செய்யும் இந்தக் கீரை... சப்பாத்தி, தோசைக்கு செம்ம சைடிஷ்: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
நிறைய சத்துக்கள் நிறைந்த ஒரு கீரையை வைத்து சப்பாத்தி மற்றும் தோசைக்கு ஏற்ப ஒரு சைடிஷ் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
நிறைய சத்துக்கள் நிறைந்த ஒரு கீரையை வைத்து சப்பாத்தி மற்றும் தோசைக்கு ஏற்ப ஒரு சைடிஷ் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
சப்பாத்தி மற்றும் தோசைக்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் எப்படி செய்வது என்று பார்ப்போம். சாப்பாட்டுக்கு தான் கீரை சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த மாதிரி செய்தீர்கள் என்றால் இதை சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். சுவையான வெந்தய கீரை பூண்டு கறி செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
எண்ணெய் சீரகம் பூண்டு வெந்தய கீரை வேர்க்கடலை வெள்ளை எள் கடலை மாவு காஷ்மீரி மிளகாய் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் சிவப்பு மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, அதில் சீரகம், 25 பல் பூண்டு மற்றும் 2 கட்டு வெந்தய கீரை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து, ஒரு மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலை, 2 தேக்கரண்டி வெள்ளை எள், 2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
Advertisment
Advertisements
இப்போது, அதே கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, ½ தேக்கரண்டி சீரகம், 3 காஷ்மீரி மிளகாய், 30 கிராம் நறுக்கிய பூண்டு மற்றும் 2 நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு, 2 நறுக்கிய தக்காளி, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி தேகி சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
அரைத்து வைத்த பேஸ்ட்டை இந்த கலவையுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக, வறுத்து வைத்திருந்த வெந்தய கீரை மற்றும் பூண்டு கலவையை சேர்த்து நன்றாக கலந்து சில நிமிடங்கள் சமைக்கவும். அவ்வளவு தான் சுவையான வெந்தய கீரை பூண்டு கறி இப்போது தயாராகி விட்டது.