முருங்கை மரத்தில் இருக்கக்கூடிய அனைத்துமே உடலுக்கு சத்து வாய்ந்தது தான். முருங்கையில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. உடம்புக்கு தேவையான அனைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளது.
Advertisment
அப்படி இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரையில் தொக்கு செய்து எப்படி சாப்பிடுவது என்று செஃப் வெங்கடேஷ் பட் அவரது யூடியூப் பக்கத்தில் நமக்கு செய்து காட்டுகிறார்.
தேவையான பொருட்கள்
முருங்கை கீரை துவரம் பருப்பு எண்ணெய் காய்ந்த மிளகாய் சீரகம் வெந்தயம் பூண்டு வெங்காயம் தக்காளி உப்பு மஞ்சள் தூள் புளி உளுந்து கருவேப்பிலை பெருங்காயத்தூள்
Advertisment
Advertisements
செய்முறை
கீரையை எடுத்து அதில் உள்ள குச்சிகளை நீக்கி வெறும் தலைகளை மட்டும் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். துவரம் பருப்பு முருங்கை கீரை இரண்டையும் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். அடுத்ததாக இதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இந்த மசாலா கலவை நன்கு வெந்து பச்சை வாசம் நீங்கியதும் வேகவைத்து வைத்துள்ள பருப்பு முருங்கைக் கீரையை இதில் சேர்த்து நன்கு வேக விட்டு பின்னர் இதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக இதனை தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து வதக்கி அதில் அரைத்து வைத்துள்ள முருங்கை தொக்கை சேர்த்து நன்கு கலந்து வேக விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவிட்டு எடுத்தால் சுவையாக இருக்கும்.