/tamil-ie/media/media_files/uploads/2022/07/tamil-indian-express-2022-07-27T175632.565.jpg)
How The clove Is Effective In Managing Diabetes in tamil
வயிற்று நோய்கள், பல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற நம் சமையலறையில் உள்ள ஒரு மசாலாப் பொருள் உதவுகிறது என்பது ஆச்சரியம் தானே. ஆம், சமையலில் சுவைக்காக சேர்க்கப்படும் கிராம்பு அற்புதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அவை குறித்து இப்போது பார்ப்போம்.
கிராம்பு பொதுவாக இந்திய வீடுகளில் உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், உடலுக்கு மந்திரம் போல் செயல்படும் மருத்துவ மசாலாவாகவும் உள்ளது. கிராம்பு, குறிப்பாக ஆயுர்வேதத்தின் படி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படியுங்கள்: ஹார்ட் அட்டாக் அபாயம் குறையும்.. பீட்ரூட் சப்பாத்தி இப்படி செஞ்சு சாப்பிடுங்க!
தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல குணங்கள் நிறைந்தது. யூஜினால் எனப்படும் ஒரு தனிமம் கிராம்புகளில் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி மற்றும் பிற பிரச்சனைகளை தீர்க்க கிராம்பு உதவுகிறது. கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகள் உள்ளன.
பொதுவாக, கிராம்பை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம், ஆனால் அதை படுக்கைக்கு முன் உட்கொண்டால், அதன் நன்மை இரட்டிப்பாகும். கிராம்பின் பலன்களைப் பெற, இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். அதன் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
கிராம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரின் ஆரோக்கிய நன்மைகள்
கிராம்புகளை இரவில் உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்கிறது.
சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.
கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீங்கும். இது பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.
கிராம்பு சாப்பிடுவதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
கை, கால் நடுங்கும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் கிடைக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.