மக்களின் மாறிவரும் வாழ்க்கைமுறை உணவுமுறையால் இன்று பொதுவாக காணப்படும் நோயாக சர்க்கரை நோய் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை வந்துவிட்டால் வாழ்க்கையில் இனிமை போய்விட்டதாகக் கவலைப்படுகிறார்கள். ஆனால், மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளின் துணையுடன் உணவுமுறையில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொண்டு முயற்சி செய்தால் சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்த என்ன சாப்பிடலாம் என்று யோசிப்பவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வெள்ளரிக்காய், லெமன் சாப்பிடுங்கள் என்று பரிந்துரைக்கிறார்கள். வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உணவில் வெள்ளரியை எப்படி பயன்படுத்துவது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். இதை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு தவறான உணவு முறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம் என்று கூறுகிறார்கள்.
நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஆரோக்கியம் மோசமடையத் தொடங்குகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுமுறை மிகவும் முக்கியமானது. அதற்கு உணவில் வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். வெள்ளரிக்காயில் பல வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இதை சாலட், சூப், ரைதா அல்லது சாண்ட்விச் செய்து சாப்பிடலாம். சுவையாகவும் இருக்கும்.
வெள்ளரிக்காய் சூப்
வெள்ளரிக்காய் சூப் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். வெள்ளரிக்காய் சூப் சாப்பிட வேண்டுமா? முதலில் ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி, பின்னர் 3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு சின்ன வெங்காயம், ஒரு பூண்டு மொட்டு, கால் டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், அரை கப் கொத்தமல்லி, ஒரு டீஸ்பூன் சீரகம், உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மிக்ஸியில் போட்டு அடிச்சு எடுத்து கோப்பையில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அதில் தயிரை சுவைக்கு ஏற்ப பயன்படுத் வேண்டும். இந்த வெள்ளரிக்காய் சூப் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பதோடு உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
வெள்ளரி சாலட்
சிலருக்கு வெள்ளரிக்காய் சூப் பிடிக்காது. அப்படி வெள்ளரிக்காய் சூப் பிடிக்கவில்லை என்றால், தினமும் வெள்ளரி சாலட்டை சாப்பிடலாம். சாலட் வைட்டமின்களை வழங்குவது மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
வெள்ளரிக்காய் ரைத்தா
ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தினமும் வெள்ளரி ரைதாவை சாப்பிட வேண்டும். அதற்கு வெள்ளரிக்காயைத் துருவி, தயிரில் கலந்து, சுவைக்கு ஏற்ப கருப்பு உப்பு சேர்த்து, தினமும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, எடையும் குறையும்.
இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பல ஆலோசனைகள் கூறப்பட்டாலும் மருத்துவரின் ஆலோசனையுடன் தொடங்குவது நல்லது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.