summer curd benefits: கோடை காலத்தில் இயற்கையாகவே குளிர்ச்சியான மற்றும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அதில், வெப்பத்தை வெல்லும் சிறந்த உணவு தயிர் தான்.
தயிர் சாதம் குறிப்பாக கோடையில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமின்றி செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. அதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற மதிய உணவாக சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உணவு சிகிச்சை நிபுணர் டாக்டர் ரியா பானர்ஜி அன்கோலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரியா கூற்றுப்படி, தயிர் செரிமானத்திற்கு நல்லது. பால் தயாரிப்பாக இருப்பதால், தயிர் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மையாகும். வயிறு சரியில்லா நேரங்களில் தயிர் சாப்பிடலாம். தயிரில் லாக்டிக் அமிலம் போன்ற கரிம அமிலங்களும் நிறைந்துள்ளதால், அவை ஊட்டச்சத்துக்கள், மைக்ரோமினரல்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. குறிப்பாக ஸ்டீராய்டு ஹார்மோன்கள், கார்டிசோலின் வளர்ச்சியைத் தடுப்பதால், உடல் பருமன் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது என்றார்.
மேலும் பேசிய அவர், புரதத்தின் நல்ல மூலமாகும். எடை இழப்பிற்கு முக்கிய பகுதியாகும். இதில் சில நல்ல கொழுப்புகள் உள்ளன. அதேபோல், உங்கள் பசியை கட்டுக்குள் வைத்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, தயிரில் கால்சியம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், இதனை சாப்பாட்டிற்கு இடைப்பட்ட நேரத்திலோ அல்லது மாலை சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
எந்த தயிர் சாப்பிடக்கூடாது?
கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்பு தயிரை வாங்கக்கூடாது. அவை மிகவும் பதப்படுத்தப்பட்டதால், செரிமான அமைப்பில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.
யார் தயிர் சாப்பிடக்கூடாது?
தயிர் ஒவ்வாமை இருந்தாலோ அல்லது தயிரை சேர்க்கக்கூடாத சிகிச்சை முறையில் ஈடுபட்டாலும் அதனை தவிர்க்க வேண்டும். எனவே, தயிரை உணவு முறையில் சேர்த்துகொள்வதற்கு முன்பு, மருத்துவரிடம் கலந்துரையாடி கொள்ளுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil