உருளை வறுவலுக்கு இந்த சீக்ரெட் மசாலா... தயிர் சாதத்துக்கு செம்ம காம்பினேஷன்; இப்படி ட்ரை பண்ணுங்க!

தயிர்சாதத்துக்கு ஏற்ற உருளைக்கிழங்கு மசாலா ஸ்பெஷலான பொடி போட்டு சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தயிர்சாதத்துக்கு ஏற்ற உருளைக்கிழங்கு மசாலா ஸ்பெஷலான பொடி போட்டு சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
potato fry

உருளைக்கிழங்கு என்பது பலருக்கும் விருப்பமான ஓர் உணவுப் பொருள். வழக்கமான உருளைக்கிழங்கு வறுவலில் இருந்து வேறுபட்டு, ஒரு புதிய சுவையுடன், எளிதில் செய்யக்கூடிய இந்த வறுவலை நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்யலாம். மசாலாக்கள் இன்றி, எளிய முறையில் தயாரிக்கப்பட்டாலும், இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இதனை எப்படி செய்வது என்று ஃபூடிஸ்ரூப் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு  
கடுகு
உளுத்தம் பருப்பு
கறிவேப்பிலை
மசாலாப் பொடிக்கு:
பொட்டுக்கடலை
பூண்டு - 2 பற்கள்
வரமிளகாய் தூள்
கறிவேப்பிலை

செய்முறை:

Advertisment
Advertisements

முதலில், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்ததும், வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.

இந்த வறுவலுக்கான பிரத்யேக மசாலாப் பொடியை தயார் செய்ய, பொட்டுக்கடலை, இரண்டு பூண்டு பற்கள், வரமிளகாய் தூள் மற்றும் கறிவேவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கு வதங்கும்போது, அரைத்து வைத்துள்ள இந்த மசாலாப் பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
உருளைக்கிழங்கு விரைவாக வறுபட்டு, பொடி மசாலாவுடன் நன்கு கலந்து, தனித்துவமான சுவையுடன் தயாராகிவிடும். 

இதை லஞ்ச் பாக்ஸ்க்கு தயிர் சாதத்துடன் கொடுத்து விடலாம் சுவையாக இருக்கும். பிள்ளைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

Cooking Tips Benefits of consuming potatoes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: