/tamil-ie/media/media_files/uploads/2022/11/honey-1.jpg)
டொரோண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தேன் இருதய ஆரோக்கியத்திற்கு பல முக்கிய நன்மைகளை செய்கிறது என்று கண்டறிந்துள்ளனர். குறிப்பாக தேன் ஒரு பூவில் இருந்து பச்சையாக இருந்தால் இதய ஆரோக்கிய நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது.
தேனீக்களால் சேகரிக்கப்படும் இனிப்பு மற்றும் பிசுபிசுப்பான தங்கத் திரவமான தேன், 'வாழ்க்கையின் அமுதம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இது பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தேன் சாப்பிடும்போது அல்லது பயன்படுத்தும்போது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. indianexpress.com உடனான முந்தைய உரையாடலில், ஷாலிமர் பாக் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையின் தலைவர் டாக்டர் கீதா புரியோக், மேக்ஸ் மருத்துவமனை, ஷாலிமார் பாக், “காயங்களைக் குணப்படுத்துவதிலும், நோய்த்தொற்றுகளுக்கு எதிராகப் போராடுவதிலும் ஒரிஜினல் தேன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது” என்கிறார்.
டொரொண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தேன் இருதய ஆரோக்கியத்திற்கான பல முக்கிய நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர் - குறிப்பாக தேன் பச்சையாகவும், பூவில் இருந்து எடுக்கப்பட்டிருந்தால் நல்லது என்று கூறுகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் தேன் பற்றிய மருத்துவ பரிசோதனைகளின் முறையான மறுஆய்வு மற்றும் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டனர். “சாப்பிடுவதற்கு முந்தைய குறைந்த இரத்த குளுக்கோஸ், மொத்த மற்றும் எல்டிஎல், அல்லது 'கெட்ட' கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயின் குறிப்பான் ஆகியவற்றைக் குறைத்தது என்பதைக் கண்டறிந்தனர். இது நல்ல கொழுப்பு மற்றும் அழற்சியின் சில தன்மைகளை அதிகரித்தது” என்று கூறுகிறது.
“தேனில் சுமார் 80 சதவிகிதம் சர்க்கரை இருப்பதால் இந்த முடிவுகள் ஆச்சரியமளிக்கின்றன” என்று T's Temerty Faculty of Medicine-இல் உள்ள ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளரும் ஊட்டச்சத்து அறிவியலில் ஆராய்ச்சிக் கூட்டாளருமான தவ்சீஃப் கான் கூறினார். “ஆனால் தேன் என்பது பொதுவாக, அரிதான சர்க்கரை, புரதங்கள், கரிம அமிலங்கள் மற்றும் பிற உயிரியக்கக் கலவைகள் ஆகியவற்றின் சிக்கலான கலவையாகும். அவை ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கக்கூடும்.” என்று கூறினார்.
நீங்கள் தற்போது சர்க்கரையைத் தவிர்க்கும் நிலையில் இருந்தால், தேன் உட்கொள்ளத் தொடங்குவதை ஆய்வு பரிந்துரைக்கவில்லை என்று தவ்சீஃப் கான் விளக்கினார். “நீங்கள் ஒரு டேபிள்ஸ்பூன் சுகர், சிரப் அல்லது வேறு இனிப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த சர்க்கரைக்கு பதிலாக தேனாக உட்கொள்வது கார்டியோமெட்டபாலிக் அபாயங்களைக் குறைக்கும்” என்று அவர் கூறினார்.
ஊட்டச்சத்து விமர்சனங்கள் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 18 கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மற்றும் 1,100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் அடங்கியுள்ளனர். சோதனைகளில் தேனின் சராசரி தினசரி டோஸ் 40 கிராம் அல்லது இரண்டு தேக்கரண்டி. பூவில் இருந்து எடுக்கப்படும் தேன் உடலில் சமநிலையை ஏற்படுத்துகிறது அல்லது நன்மை பயக்கும் விளைவுகளை தொடர்ந்து உருவாக்குகிறது” என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட தேன், பதப்படுத்தப்பட்ட பிறகு அதன் பல ஆரோக்கிய விளைவுகளை இழக்கிறது என்பதையும் தவ்சீஃப் கான் வெளிப்படுத்தினார். பொதுவாக குறைந்தது 10 நிமிடங்களுக்கு 65 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைத்திருந்தால், ஆரோக்கிய விளைவுகளை இழக்கிறது. சீரான சுகாதார நலன்களை வழங்கக்கூடிய உறுதியான தயாரிப்பு நமக்குத் தேவை” என்று அவர் கூறினார்.
எய்ம்ஸ் முன்னாள் ஆலோசகரும், எஸ்.ஏ.ஏ.ஓ.எல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனருமான, இருதயநோய் நிபுணரான டாக்டர் பிமல் சாஜர், இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவிக்கையில், “பதப்படுத்தப்படாத தேன் (தூய்மையான தேன்) ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில், இது மற்ற பொதுவான விஷயங்களைக் கொண்டுள்ளது. அரிய சர்க்கரை, புரதங்கள் மற்றும் கரிம அமிலங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆரோக்கியமான சர்க்கரை, பச்சை தேன் போன்றது. இது கார்டியோமெட்டபாலிக் அபாயங்களைக் குறைப்பதில் உதவுவதோடு, அதை உட்கொள்வதால் நிலையான ஆரோக்கிய நன்மைகளுக்கும் வழிவகுக்கும். இந்த ஆய்வு புதியது. உறுதியான ஆதாரத்திற்கு ஒரு பெரிய மாதிரி தேவைப்படுகிறது. இது பொது மக்களிடையே உள்ள கட்டுக்கதைகள். தவறான எண்ணங்களை உடைக்க உதவும் சரியான திசையில் எடுத்துவைக்கப்பட ஒரு படி” என்று கூறினார்.
சர்க்கரைக்கு பதிலாக பச்சை தேனை உட்கொள்வது சாப்பிடுவதற்கு முந்தைய இரத்த குளுக்கோஸ் மற்றும் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று அவர் கூறினார். ஏனெனில், தேன் இயற்கையில் காணப்படும் இயற்கையான பொருள். பதப்படுத்தப்படாத எந்தவிதமான பாதுகாப்புகளும் அல்லது இரசாயனங்களும் இல்லாமல் உள்ளது. ஒரு நாளில் 35-45 கிராம் பதப்படுத்தப்படாத தேனை உட்கொள்வது, அது தேநீர் மூலமாகவோ, பச்சையாகவோ அல்லது வேறு எந்த வழியாக இருந்தாலும், மனித உடலில் பல நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், “இந்த ஆய்வு இன்னும் புதியது. உறுதியான சான்றுகள் தேவைப்படுவதால் முற்றிலும் தேனுக்கு மாறுவது அறிவுறுத்தப்படவில்லை” என்று டாக்டர் சாஜர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.