இன்று பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து உட்கொண்டு வருகிறோம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி எனப் பலவற்றை மேற்கொண்டு வருகிறோம். சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உணவு மற்றும் உடற்பயிற்சி பழக்கங்களை முறைப்படுத்த வேண்டும். ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில், வீட்டிலேயே இயற்கையான முறையில் சர்க்கரையை கட்டுப்படுத்த நிபுணர்கள் சில உணவு முறைகளை கூறுகின்றனர்.
இரவில் உறங்கச் செல்வதற்கு முன் சில உணவுகளை உட்கொள்வது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நிலையாக வைக்க உதவுகிறது என்று கூறுகின்றனர். உறங்க செல்லும் முன் பாலில் சேர்த்து சில உணவுகளை சாப்பிட அறிவுறுத்துகின்றனர்.
- பாதாம்
பாதாமில் கலோரிகள் அதிகம் உள்ளது. இருப்பினும் அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்ட், புரதங்கள் போன்ற நல்ல கொழுப்பு உள்ளது. பாதாமில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும்.
இரவில் உறங்க செல்லும் முன் 2-3 பாதாம் பருப்பை நசுக்கி பாலுடன் சேர்த்து குடிக்கவும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
- கருப்பு மிளகு
மிளகு, சளி மற்றும் இருமலுக்கு உகந்ததாக உள்ளது. பசியின்மைக்கு சிகிச்சைக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு நன்மை தருகிறது.
தூங்க செல்லும் முன் மூன்று அல்லது நான்கு கருப்பு மிளகை பொடியாக்கி பாலில் போட்டு கொதிக்க விடவும். சுவைக்காக அரை டீஸ்பூன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம். பின் பாலை வடிகட்டி குடிக்காலாம்.
- மஞ்சள்
மஞ்சள் உணவில் சேர்ப்பது சிறந்த மருந்தாகவும் உள்ளது. மஞ்சளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நீரிழிவு நோய்க்கு
நன்மை அளிக்கிறது.
எனவே, இரவில் மஞ்சள் கலந்த பால் குடிப்பது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இலவங்கப்பட்டை
உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவுகிறது.
இதற்கு, ஒரு டம்ளர் பாலில் 2-3 இலவங்கப்பட்டை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். சுவைக்காக சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம். மிதமான சூட்டில் குடிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil